அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...என்ன நண்பர்களே! தலைப்பு குழப்புகின்றதா?

மோடியின் செல்லாக்காசு அறிவிப்புக்கு முன் இந்தியாவில் 1946 ஆம் ஆண்டு வெள்ளைக்காரன் காலத்திலும், 1978 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவிலும் இதே கூத்துக்கள் அரங்கேறியுள்ளன என்றாலும் மக்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காக தினமும் செத்து மடியவில்லை, வங்கி வாசலில் வரிசைக்கட்டி நாள் முழுக்க நிற்கவில்லை.

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் ஆவணங்களின்படி 10,000 ரூபாய் நோட்டை இந்திய அரசு செல்லாது என அறிவித்தபோது நாடு முழுவதும் இருந்த மொத்த நோட்டுக்களே 346 தான். அதில் இன்றும் பழைய நோட்டு சேகரிப்போரிடம் எஞ்சி இருப்பவை சுமார் 10 நோட்டுக்களே இருக்கும். அந்த 10 நோட்டில் ஒன்றே ஒன்று மட்டுமே துபையில் உள்ளது.

1946 ஆம் ஆண்டு புழக்கத்திலிருந்த 500, 1000 மற்றும் 10,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டது போல் 1978 ஆம் ஆண்டு புழக்கத்திலிருந்த 1,000, 5,000 மற்றும் 10,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதாக வரலாறு கூறும் துபை வாழ் இந்தியரான ராம்குமார் துபையில் பழைய நோட்டுக்களை வாங்கி விற்கும் நிறுவனத்தை கடந்த 15 வருடங்களாக நடத்தி வருகிறார் அதாவது செல்லாத நோட்டுக்கள் இவரை செல்வந்தராக மாற்றியுள்ளது.

1946 ஆம் ஆண்டு செல்லாததாக அறிவிக்கப்பட்ட 1,000 ரூபாய் நோட்டு மற்றும் 1978 ஆம் ஆண்டு செல்லாததாக அறிவிக்கப்பட்ட1,000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுக்களை தற்போதும் தன்னுடன் வைத்திருக்கும் ராம்குமார் இவற்றிற்கான சந்தை விலையை சொல்ல மறுப்பதுடன் இவை தனியாக பேசி முடிக்கப்பட வேண்டிய தொழில் ரகசியம் எனக்கூறுகிறார். மேலும் இதுபோன்ற பழைய நோட்டுக்கள் சர்வதேச அளவில் பகிரங்க ஏலம் மூலமும் விற்கப்படுகிறதாம்.

ஒருவேளை மோடியின் செல்லாத நோட்டுக்கள் கூட 50, 60 ஆண்டுகளுக்கு பின் லட்சக்கணக்கில் விலை போனாலும் போகலாம்! சகோஸ், இப்போது தலைப்பு புரிகிறதா?

தகவலுக்காக:
1957 ஆம் ஆண்டு வரை அமீரகம் உட்பட வளைகுடா நாடுகளில் இந்திய ரூபாய்களே பயன்படுத்தப்பட்டன. பின்பு இந்திய அரசாங்கம் வளைகுடா நாடுகளுக்கு என தனியான ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு புழக்கத்தில் விட்டது. அமீரகம் 70களின் ஆரம்பத்தில் தனக்கென திர்ஹங்களை அச்சிடத் துவங்கியபின் இந்திய நோட்டுக்களின் வளைகுடா ஆதிக்கம் நிறைவுக்கு வந்தது.
Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-