அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடான ஷார்ஜாவில் இந்திய மற்றும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் 10 பேரை பஸ் நசுக்கியது. இதில் ஒருவர் பலியானார்.


ஷார்ஜாவின் அல் ஹம்ரியா பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த 8 ஊழியர்கள் மற்றும் இரண்டு பாகிஸ்தான் ஊழியர்கள் உள்பட பலர் வேலை முடிந்த பின்னர், தாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது வேகமாக வந்த பஸ் ஒன்று கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் இரண்டு நாடுகளைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக கலிபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று உடனடியாகத் தெரியவில்லை. அவரது உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துக்கு காரணமாக பஸ் சிறைப் பிடிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வாரத்தில் நடைபெற்ற 3-வது விபத்து இதுவாகும். ராஸ் அல் கைமா நகரத்தில் கடும் பனியால் 26 வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதியதில் 60 வயது இந்திய முதியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். நான்கு பேர் காயம் அடைந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பஸ் விபத்தில் இரண்டு இந்திய ஊழியர்கள் பலியானார்கள்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-