அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


குவைத், டிச-26
கடந்த 2 ஆண்டுகளில் உலகளவில் கச்சா எண்ணெய் விலை சரிவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளை வளைகுடா நாடுகள் சந்தித்து வருகின்றன. 


இதில் சவுதியின் நிலைமை வெளியுலகிற்கு பட்டவர்த்தனமான தெரியவந்துள்ள நிலையில் மற்ற வளைகுடா நாடுகளும் அமுக்கி வாசித்து வரும் பொருளாதார நெருக்கடிகளின் விளைவை இதுபோன்ற கூக்குரல்கள் மூலம் யூகிக்க முடியும்.

பொருளாதார வீழ்ச்சியால் சொந்த நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக திரும்பி விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை மற்றும் காலியாகும் வேலைவாய்ப்புக்களை சொந்த நாட்டு மக்களுக்கு வழங்கி அமைதிபடுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவது எந்த அரசும் இயல்பாக சந்திக்கும் ஒன்றே.

குவைத்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 4 மில்லியன் அதில் சொந்த நாட்டு மக்கள் 1.3 மில்லியன் மக்களே, எஞ்சிய 2.7 மில்லியன் மக்கள் வெளிநாட்டினரே. 

இந்நிலையில், தேவைக்கு அதிகமாக மிதமிஞ்சிய நிலையில் காணப்படும் சுமார் 1 மில்லியன் வெளிநாட்டினரை வெளியேற்ற வேண்டும் என குவைத், பர்வானியா (Farwaniya) பிரதேச கவர்னர் ஷேக். பைஸல் அல் ஹமூத் அல் சபா Governor Sheikh Faisal Al-Hamoud Al- Sabah) குவைத் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை வெளிநாட்டு தொழிலாளர் மட்டுமே செய்துவரும் 56 சதவிகித பணிகளான கூரியர், விவசாயம், வீட்டு வேலை, டிரைவர் போன்ற சம்பளம் குறைவான வேலையை பார்க்க ஒருபோதும் குவைத் நாட்டினர் முன்வர மாட்டார்கள் என்பதால் தீர்வு என்பது இடியாப்பச் சிக்கல் தான்.

Source: Kuwait Times / Msn

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-