அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 கத்தார் பொது மன்னிப்பு காலம் முடிவடைந்த பின்னர் தீவிரமான பரிசோதனைகள் இடம்பெறும் என கத்தார் செய்திகள்  தெரிவிக்கின்றன.பொது மன்னிப்புக் காலம் வழங்கப்படும் அதனைப் பயன்படுத்தாமல் கத்தாரில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்தே மேற்படி தீவிர சோதனை வேட்டை நடாத்தப்பட இருக்கிறது. மேற்படி காலத்தை பயன்படுத்தி தங்களது நாடுகளுக்கு செல்லாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.

பெரும் தொகையான மக்கள் மேற்படி பொது மன்னிப்பின் கீழ் தங்களது நாடுகளுக்கு செல்ல விண்ணப்பித்துள்ளார்கள்.மன்னிப்புக்காலம் முடிவடைய இன்னும் சிறிது காலமே எஞ்சியுள்ள நிலையில் பயன்படுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க்கப்பட இருக்கிறது.

பொது மன்னிப்பின் கீழ் தாயகம் செல்ல விரும்புபவர்கள் திகதி குறிப்பிடாத விமான டிக்கட்டுடன் (OPEN TICKET ) வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர்,அப்படி டிக்கட்டை பெற்றுக்கொள்ள பண வசதி இல்லாதவர்கள் யாரும் இருந்தால் மனிதாபிமான அடிப்படையில் சில நேரம் செய்து கொடுக்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக கத்தாரில்  தங்கி இருப்பவர்கள் எந்த வித சட்ட ரீதியான சிக்கல்களும் இல்லாமல் தங்களது சொந்த நாட்டுக்குச் செல்ல இது ஒத்து வரப்பிரசாதமாகும். மேற்படி பொது மன்னிப்பு தொடர்பான அறிவிப்பை உள்துறை மக்கள் தொடர்புத்துறை அமைச்சு (MINISTRY OF INTERIOR ‘S PUBLIC RELATIONS DEPARTMENT ) அரபிக் ,ஆங்கிலம்,தமிழ்,நேபாளம் ,உருது, மற்றும் ஹிந்தி உட்பட 11 மொழிகளில் வெளியிட்டு இருந்தது . அது மட்டுமல்லாமல் செய்தித்தாள் ,மற்றும் அந்தந்த நாட்டு தூதரகங்கள் மூலமும் பொது மன்னிப்பு தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்தது..

இந்த பொது மன்னிப்பு காலத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக கத்தாரில் தங்கியிருந்த இலங்கையர்கள் உடன்பட பல நாட்டவர்கள் கணிசமான அளவில் வெளியேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .. பொது மன்னிப்பு காலம் முடிவடைந்த பின்னர் எந்தவொரு தொழில் வழங்குநரும் உத்தியோபூர்வ விசா இல்லாமல் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி இருந்தால் 3 வருடம் சிறைத்தண்டனை அல்லது 50,000 கத்தாரி ரியால்கள் தண்டமாகவும் விதிக்கப்படும் .. சில வேலை மேற்படி தண்டனைகள் இரண்டும் வழங்கப்படலாம் 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-