அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் 48 வயதான ஜகனாதன் செல்வராஜ். வேலையை இழந்த இவர் போதிய வருவாய் இல்லாத காரணத்தால் சோனாபூர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கான பூங்கா ஒன்றில் இரவு தங்கி வருகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இவரது தாயார் ஒரு விபத்து காரணமாக உயிரிழந்துள்ளார். அப்போது இவர் வேலை பார்த்து வந்த நிறுவனம் அனுமதி மறுத்துள்ளது. இதனையடுத்து தொழிலாளர் நீதிமன்றத்தில் இவர் முறையிட்டுள்ளார்.


இதனால் இவர் வேலையில் இருந்த நிறுவனம் இவரை வெளியேற்றியுள்ளது. தற்போது இந்த வழக்கு தொடர்பாக மாதம் இருமுறை கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றம் அலைந்து வருகிறார் இவர்.


போதிய வருவாய் இல்லாத காரணத்தால் தொழிலாளர் நல நீதிமன்றம் அமைந்துள்ள கராமா பகுதிக்கு நடந்தே சென்று வருகிறார். இவர் தங்கியுள்ள பகுதியில் இருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது நீதிமன்றம்.


சீறிப்பாயும் வாகனங்கள், அனலாகும் வெப்பக்காற்று, புழுதிப்புயல் உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளை கடந்த இரண்டு வருட பயணத்தில் பல முறை சந்தித்துள்ளார்.


4 மணி நேர கால் நடை பயணத்தில் மொத்தம் 54 கி.மீ தூரம் நடந்து தமது வழக்கு குறித்து அறிந்து வருகிறார்.உதவிக்கு எவருமே இல்லாத நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக 20 முறை நீதிமன்றம் வந்து சென்றிருக்கிறார்.இந்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக துபாய் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு ஆண்டுகளில் 1000 கிலோ சென்றியிருப்பது குறிப்பட்ட தக்கது 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-