அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

புதுடெல்லி:

பிரதமர் மோடி இன்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

நாட்டில் கருப்பு பணமும் ஊழலும்தான் ஏழ்மைக்கு காரணமாக உள்ளது. ஏழை மக்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது இந்த அரசு. அடித்தட்டு மக்களின் மேம்பாட்டிற்காகவே இந்த அரசு செயல்பட்டு வருகிறது. நாட்டிற்கு எதிரான பொருளாதார சூழ்ச்சிகளை முறியடிக்க அரசு திட்டங்களை வகுத்துள்ளது. பயங்கரவாத செயல்களுக்கு கருப்பு பணம் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரூ.1.25 லட்சம் கோடி கருப்பு பணத்தை அரசாங்கம் மீட்டுள்ளது. சர்வதேச நாடுகளுடன் போடப்பட்ட பொருளாதார ஒப்பந்தங்களை அரசு மாற்றி அமைத்துள்ளது.

விலைவாசி உயர்வுக்கும் ஊழலுக்கும் தேடித்தொடர்பு உள்ளது என்பதை இந்த அரசு உணர்ந்துள்ளது. ஊழலால் சேர்த்த பணமோ அலலது கருப்புப் பணமோ ஹவாலா பணம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் இனி செல்லாது!
நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்துள்ளார்.
நாளை வங்கிகள் விடுமுறை

வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வரும் 10 ம் தேதி முதல் மாற்றிக்கொள்ளவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக, நாளை ஒரு நாள் நாடு முழுவதும் உள்ள வங்கிகள், ஏ.டி.எம். இயந்திரங்கள் மற்றும் தபால் நிலையங்கள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பண பரிவர்த்தனைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

50 நாட்கள் அவகாசம்

ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ள பொதுமக்களுக்கு 50 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் ரூ.5 ஆயிரம் வரை எந்த அடையாள அட்டையும் இன்றி பணம் மாற்றிக்கொள்ள முடியும் என்றும், ரூ.5 ஆயிரத்திற்கு மேல் வங்கியில் பணம் மாற்றினால், அடையாள அட்டைக் கட்டாயம் காண்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கியில் ஏற்றுக்கொள்ளப்படாத நோட்டுக்களை, ரிசர் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டள்ளது.

பணம் மாற்ற சிறப்பு சலுகை

சில தவிர்க்க முடியாத காரணங்களால், பணத்தை மாற்ற முடியாதவர்கள், 2017 ஆண்டு மார்ச் 31 ம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என்றும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய நோட்டுக்கள் அறிமுகம்மேலும், நாளை மறுநாள் முதல் புதிய வடிவில் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் மோடி அறிவித்துள்ளார். இதன் மூலம் கள்ள நோட்டுக்கள் அச்சடிக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், பெட்ரோல் பங்க்குகள், இடுகாடுகள் ஆகிய இடங்களில் மட்டும் வரும் நவம்பர் 11ம் தேதி வரை ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும், 2005 க்கு முன்பு வரை அச்சிட்ட நோட்டுக்களை மட்டும் மாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ள சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மோடி வருத்தம்

குடியரசுத் தலைவரை சந்தித்து, இது தொடர்பாக விளக்கம் அளிக்க உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்கும் விதமாக, ஊழலுக்கு எதிரான போராக இது கருதப்படுவதாகவும் பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். இதனால் மக்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துகிறேன் என்றும் பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஏடிஎம்களில் குவியும் மக்கள்!

நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்துள்ளார். ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வங்கியில் மாற்ற டிசம்பர் 30 ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.தவிர்க்க முடியாத காரணங்களால், மாற்ற இயலாதவர்கள் மார்ச் 31-ம் தேதி வரை அடையாள அட்டையைப் பயன்படுத்தி மாற்றிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நாளை காலை முதல் 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்பதால், ஏடிஎம்களில் மக்கள் படையெடுக்க துவங்கி இருக்கிறார்கள்.

- ரா.அருள் வளன் அரசு

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-