அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 
திருச்சி விமான நிலையம் | கோப்பு படம்


தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து அதிக அளவில் பயணிகளை கையாள்வதில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ளது திருச்சி விமான நிலையம். திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, குவைத் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நாடுகளில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் விடு முறையில் ஊருக்கு திரும்பும்போது திருச்சி விமான நிலையத்தில் ஒவ் வொரு முறையும் கசப்பான அனுப வங்களை சந்தித்து வருகின்றனர்.

அண்மையில் தனது உறவின ரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சிங்கப்பூரில் இருந்து வந்த துரை கோபி என்பவர், திருச்சி விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங் களில் அக்.31-ம் காலை 7 மணிக்கு பதிவிட்டார். இந்த வீடியோவை 5 நாட்களில் 4.56 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும், இந்த வீடியோ 24 ஆயிரம் லைக்கு களையும், 7,400 பேர்களது கருத்து பதிவுகளையும், 26,528 பகிர்வு களையும் பெற்றுள்ளது.


இந்த வீடியோவில், திருச்சி விமான நிலையத்தில் விமானம் வந்து இறங்கி 2 மணி நேரத் துக்கு பின்னரே வெளியே வர முடிந்ததாகவும், தான் சென்று சேருவதற்குள் உறவினரின் இறுதிச் சடங்குகள் முடிந்து விட்டதால், மிகுந்த மனவேதனையுடன் மீண் டும் சிங்கப்பூருக்கு திரும்பிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். விமானத்தில் வந்திறங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை ஒரே வரிசையில் நீண்ட நேரம் நிற்க வைத்து சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிடுவதும், வாடா, போடா என ஒருமையில் பேசுவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘விமான நிலைய அதிகாரிகள் இந்தியில் மட்டுமே பேசுவது தமிழகத்தைச் சேர்ந்த இந்தி தெரியாதவர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் உள்ள விமான நிலை யங்களில் பணியாற்றும் ஊழியர் கள் தமிழில்தான் பேச வேண்டும். அதேபோன்று ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் செய்யப்படும் உயிர் காக்கும் அறிவிப்புகள் தமிழில்தான் இருக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து திருச்சி விமான நிலைய இயக்குநர் குணசேகரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரில் ஒருசிலருக்கு மட்டுமே தமிழ் தெரியும். அவர்களை பயணிகள் வருகை, புறப்பாடு ஆகிய இடங்களில் பணியில் ஈடு படுத்துகிறோம். தமிழ் தெரிந்தவர் களை மத்திய தொழில் பாது காப்புப் படையில் சேர்க்க துணை ஆணையருக்கு பரிந்துரை செய்யப்படும். நாடு முழுவதும் விமானங்களில் அறிவிப்புகள் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே செய்யப்படு கின்றன. தமிழில் அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.

சுங்கத்துறை அலுவலர்கள் பயணிகளை சோதனையிடும்போது தரக்குறைவாக பேசுவதாக இது வரை எந்தப் புகாரும் வரவில்லை. பயணிகளுக்கு ஏற்படும் கால தாமதத்தைத் தவிர்க்கவும், பயணி களிடம் கனிவான அணுகுமுறை யைக் கையாளவும் விரைவில் அனைத்துப் பிரிவு அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்தி உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப் படும் என்றார்.

எனினும், திருச்சி விமான நிலை யத்தில் ஏராளமான பயணிகள் கசப்பான அனுபவத்தைச் சந்தித்த தாக சமூக வலைதளத்தில் கருத்து கள் பதிவு செய்துள்ளது குறித்து அவர் விளக்கம் ஏதும் தெரிவிக்கவில்லை. 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-