அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய், நவ-10
3.7 பில்லியன் திர்ஹம் செலவில் இரண்டு கட்டங்களாக உருவாக்கப்பட்ட துபை செயற்கை கால்வாய் ( Dubai Canal ) நேற்று புதன் இரவு அதிகாரபூர்வமாக துபை ஆட்சியாளர் ஷேக். முஹமது அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. துபையின் புதிய போக்குவரத்து வசதியாகவும், வர்த்தக மையமாகவும், உலக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் சக்தியாகவும் துபை கால்வாய் திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஷேக். ஜாயித் சாலையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை அருவி 80 சக்திமிகு மோட்டார்களை கொண்டு இயக்கப்படுகிறது. மேலும், துபை கால்வாயில் படகுகள் செல்லும் போது 'தானியங்கி சென்சார்' உதவியால் அருவியில் நீர் கொட்டுவது நின்று படகு கடந்த பின் மீண்டும் நீர் கொட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டள்ளது.

Sources: Gulf News & Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
அதிரை நியூஸ்: 
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-