அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தேசிய உணவுபாதுகாப்பு சட்டம் 2013 இன்று (நேற்று) முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டையில் பெயர் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ அரிசி விலையில்லாமல் வழங்கப்படும். இதுவரை 2 நபர்கள் முதல் 4 நபர்கள் வரை உறுப்பினர்களாக உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் விலையில்லா அரிசியின் அளவில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. 5 நபர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் குடும்ப அட்டையில் உறுப்பினர்களாக இருக்கும் பட்சத்தில் ஒரு நபருக்கு தலா 5 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படும்.   


பெரம்பலூர் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 1 லட்சத்து 74 ஆயிரத்து 404 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 2,567 குடும்ப அட்டைதாரர்கள் விலையில்லா அரிசி பெறாத அட்டைதாரர்கள். மீதமுள்ள 1 லட்சத்து 71 ஆயிரத்து 837 குடும்ப அட்டைகளின் பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவர். எனவே, பொதுமக்கள் இனிவரும் காலங்களில் ரேஷன் கடைகளில் தங்களது உரிம அளவிலான விலையில்லா அரிசி உள்பட பொருட்கள் பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-