அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


WhatsApp மற்றும் Facebook போன்ற சமூக வலைத்தளத்தில் கடந்த 10 நாட்களாக மில்லத் நகரில் குடிநீர் பற்றாக்குறை. மில்லத் நகர் பெண்கள் வண்ணாரம் பூண்டி-அகரம் ரோடுகளில் தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை என பலர் செய்தி போட்டு வருகின்றனர். மேலும் இதன் உண்மை நிலை என்ன என்று மில்லத் நகரில் வசிக்கும் சில சமூக நல அக்கரை கொண்டவர்களிடம் நமது செய்தியாளர் கேட்டபோது. அதற்கு அவர்கள் மில்லத் நகரில் கடந்த 3 மாதத்திற்கு மேலாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மில்லத் நகரில் மேல்நிலை நீர் தொட்டி கட்டி பலவருடங்கள் ஆகிறது. காலை 6 மணி முதல் 9 மணிவரை தெருக் குழாய்களில் தண்ணீர் வரும். எல்லா பகுதிக்கும் தாராளமாக தண்ணீர் வந்தது. மில்லத் நகர் பெண்கள் தங்கள் தேவைக்கேற்ப்ப தண்ணீர் பிடித்துவந்தனர். அப்படி இருந்தும் கூட பாதி தொட்டி தண்ணீர் மட்டுமே காலி ஆகி இருக்கும். ஆனால் இன்று தண்ணீர் தெரு குழாய்களில் வருவது அறிதாகி போனது. காரணம் கடந்து 20 வருடமாக மில்லத் நகரில் எந்த ஒரு வீட்டுக்கும் தண்ணீர் லைன் இல்லை.

ஆனால் இன்று பல வீடுகளில் வீட்டுக்கு தண்ணீர் கனெக்சன் கொடுத்து வீட்டுக்கு இழுத்து மோட்டர்மூலம் அவர்கள் வீட்டில் உள்ள தொட்டிக்கு நேரடியாக தண்ணீர் நிறப்பிகொள்கிறார்கள் இதனால் தெருக் குழாய்களின் தண்ணீர் வருவது இல்லை. இதன் காரணமாக மில்லத் நகர் மக்கள் இன்று தண்ணீர் தேடி வண்ணராம் பூண்டி,அகரம் ரோடுகளுக்கு செல்கின்றனர். மீண்டும் பழைய படி வீட்டுக்கு தண்ணீர் கனெக்‌ஷன் கட் செய்தால் மட்டுமே தண்ணீர் பற்றாகுறை தீர்ப்பது சாத்தியம் என தெரிவித்தார்கள். அல்லது மேலும் ஒரு மேல் நிலை நீர்தேக்க தொட்டி மில்லத் நகரில் கட்ட வேண்டும் என தெரிவித்தார்கள். மேலும் நாளை திங்கள்கிழமை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மனுநீதி முகாமில் இது பற்றி மனு ஒன்று கொடுக்க போவதாக தெரிவித்தார்கள்.

ஆக எப்படியோ மில்லத் நகரில் தண்ணீர் பிரச்சணை உடனடியாக தீர்க்கபடவேண்டிய கட்டாயத்தில் உள்ளது அதிகாரிகள் கவனத்தில் கொள்ளதவறினால் மில்லத்நகர் தண்ணீர் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும். 
உடனடியாக தண்ணீர் பிரச்சனை தீர்க்கபடவேண்டும் என்பது மில்லத்நகர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது 

குறிப்பு:

இன்று (06-11-16) காலை மைக்மூலம் யார்வீட்டிலும மோட்டார் போடாதீர்கள் என அறிவிப்பு செய்தார்கள் இன்று பரவலாக எல்லாபகுதிக்கும் தண்ணீர்கிடைத்த தாக நமது வாசகர் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-