அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே தருமபுரிக்கு பயணமான திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில் அவர் காயமின்றி உயிர் தப்பினார். வேறு ஒரு காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.


திமுக பொருளாரும் , சட்டமன்ற எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் தர்மபுரியில் நடக்கும் கட்சி நிர்வாகி இல்ல திருமணத்தில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து கார் மூலம் தர்மபுரி புறப்பட்டு சென்றார்.


மு.க.ஸ்டாலின் வழக்கமாக லாண்ட் குரூசர் ப்ராடோ கார் ஒன்றை உபயோகப்படுத்தி வந்தார் , சமீபத்தில் ரூ .1.10 கோடி மதிப்புள்ள அதே நிறுவன புது கார் ஒன்றை வாங்கி இருந்தார். இது தவிர சில நேரம் பென்ஸ் காரையும் பயன் படுத்துவார்.


இந்நிலையில் நாளை காலை தர்மபுரியில் நடக்கும் திருமணத்தில் கலந்துகொள்ள முக.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையிலிருந்து புறப்பட்டு சென்றார். வழக்கமாக செல்லும் காரில் செல்லாமால் பென்ஸ் காரில் சென்றார்.


கார் வேலூர் அருகே உள்ள பள்ளிகொண்டா செக் போஸ்ட்டை கடந்து தர்மபுரி செல்ல வேகம் எடுத்துள்ளது. அப்போது முன்புறம் சென்ற வாகனம் திடீரென பிரேக் போட்டு வலதுபுறம் திரும்ப பின்னால் வந்த மு.க.ஸ்டாலின் அமர்ந்திருந்த கார் அதன் மேல் மோதாமலிருக்க சட்டென்று இடது புறம் திரும்பி உள்ளது.


ஆனால் கார் வேகமாக அந்த காரின் பின் புறம் மோதியது. எதிர்பாராத மோதலால் நிலைகுலைந்த மற்ற கார்களும் ஒன்றன் பின் ஒன்றாக மோதின. இதில் மு.க.ஸ்டாலினின் பென்ஸ் காரின் வலது பக்க பம்பர் சேதமடைந்தது. ஆனால் அதிர்ஸ்ட்வசமாக காரில் சென்ற ஸ்டாலினுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

விபத்தை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் காரில் சென்றவர்கள் என பெரும் கூட்டமே கூடிவிட்டது. பின்னர் ஸ்டாலின் வேலூர் எம்.எல்.ஏ காந்தியின் காரில் ஏறி பயணம் செய்தார்.


கடந்த மாதம் ஸ்டாலின் வாங்கிய புது கார் விமான நிலையம் செல்லும் வழியில் கத்திபாரா அருகே டயர் வெடித்து சாலையில் நின்றது. பின்னர் ஸ்டாலின் அங்கிருந்த தொண்டரணி அமைப்பாளரின் ஃபோர்ட் காரில் ஏறி விமான நிலையம் சென்றார்.

அதன் பின்னர் ஸ்டாலின் அந்த காரை பயன்படுத்தவில்லை. ஆனால் சென்னைக்குள் எங்கு சென்றாலும் ஸ்டாலின் காருடன் கூட இன்னொரு காரும் உடன் செல்கிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-