அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சேவைக்கான முழு செலவும் வசூலிக்கப்படும் பாஸ்போர்ட், லைசென்ஸ் தேர்வு கட்டணம் அதிகரிக்கிறது
புதுடெல்லி : வழக்கமாக பிப்ரவரி இறுதியில் தாக்கல் செய்யப்படும் மத்திய பொது பட்ஜெட், அடுத்த ஆண்டு முதல் ஒரு மாதம் முன்னதாக தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பட்ஜெட் ஆலோசனைகள் இப்போதே தொடங்கி விட்டன. இந்நிலையில், செலவினங்களை சரிகட்ட, ஒரு குறிப்பிட்ட சேவைக்கு எவ்வளவு செலவு ஆகிறதோ அதுவே கட்டணமாக நிர்ணயிக்கப்பட உள்ளது. இதற்கு ஏற்ப பயன்பாட்டு கட்டணங்களை அதிகரிக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளை நிதியமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதன்படி பாஸ்போர்ட், லைசென்ஸ், அரசு நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணங்கள், பதிவு செய்வதற்கான கட்டணங்கள் உள்பட பலவும் அதிகரிக்க இருக்கின்றன. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: அரசின் பல்வேறு தன்னாட்சி அமைப்புகள், மத்திய அரசிடம் இருந்து உதவி பெறுகின்றன. இதனால் அவை மூலம் அளிக்கப்படும் சேவைகளுக்கான மானியம் மத்திய அரசு தலையில் விழுகிறது. இதை எவ்வளவு நாட்களுக்குதான் அரசே தாங்கிக்கொள்ள முடியும். எனவே சம்பந்தப்பட்ட அமைப்பு அல்லது துறைகள் தங்களது செலவுகளை தாங்களே சமாளித்துக்கொள்ள வேண்டும். இதற்கு ஏற்பதான் கட்டண விகிதங்கள் மாற்றப்பட இருக்கின்றன என்றனர்.

உதாரணமாக, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு கட்டணமாக இன்னமும் நூறு ரூபாய்தான் வசூலிக்கிறது. ஆனால், உண்மையில் இந்த தேர்வு நடத்துவதற்கான செலவு அதிகம். இந்த செலவுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயித்தால்தான் அரசின் நிதிச்சுமை குறையும். இதுபோல், பாஸ்போர்ட் கட்டணம் கடைசியாக 2012ம் ஆண்டு செப்டம்பரில் ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.1,500ஆக உயர்த்தப்பட்டது. அரசு வழங்கும் பல்வேறு சேவைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணம், அதற்கான மொத்த செலவில் சிறு பகுதிதான். ரயில்வே சேவைகள் பல மானியத்துடன்வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது். சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த பிமல் ஜனால் தலைமையிலான செலவு நிர்வாக குழு ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. இதில், பல்வேறு துறைகளால் வசூலிக்கப்படும் சில சேவைகளுக்கான செலவுகளை ஈடுகட்ட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் சம்பந்தப்பட்ட துறைகள் மத்திய அரசின் மானியத்தை சார்ந்திராமல் தன்னிறைவு பெறும். இக்குழுவின் பரிந்துரைகள் அந்தந்த துறைகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.

என்னென்ன பாதிப்பு?

* அரசின் சில சேவைகளுக்கு வழங்கப்படும் செலவுக்கு ஏற்ப கட்டண விகிதங்கள் மாறுகின்றன.
* பாஸ்போர்ட் கட்டணம் உட்பட பல்வேறு கட்டணங்கள் உயரும்.
* சிவில் தேர்வுகள் உட்பட அரசு தேர்வுகளுக்கான கட்டணங்களும் அதிகரிக்கும்.
* தன்னாட்சி பெற்ற அரசு அமைப்புகள் தங்கள் செலவை தாங்களே ஈடுகட்டுவதற்கு ஏற்ப கட்டண விகிதங்கள் நிர்ணயிக்கப்படும்.
* ரயில்வே சேவைகளால் மத்திய அரசுக்கு மிக அதிக மானியச்சுமை ஏற்படுகிறது. இதனால் ரயில் கட்டணங்கள் கூட உயர்வதற்கு வாய்ப்பு உண்டு- See more at: http://m.dinakaran.com/detail.asp?Nid=256403#sthash.qgiK9i9Z.dpuf

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-