அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


மஸ்கட், நவ-26 சமீபகாலமாக சிறிதும், பெரிதுமான பல விமான விபத்துக்கள் நிகழ்ந்து வருகின்றன. அதன் வரிசையில் நேற்று வெள்ளிக்கிழமை ஸலாலா விமான நிலையத்தில் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த ஓமன் ஏர் விமானத்தின் டயர் வெடித்து சிதறியது.

இந்த சம்பவம் விமானம் புறப்படுவதற்காக ரன்வேயில் சென்று கொண்டிருந்தபோது நிகழ்ந்தாலும் விமானம் மேலே எழும்பும் முன் நிகழ்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், ரன்வேயில் கிடந்த ஏதோ ஒரு மர்மப் பொருளின் மீது மோதியதாலேயே டயர் வெடிப்பு நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது, விமானம் உடனடியாக ரன்வேயிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதை தொடர்ந்து விமான போக்குவரத்து சீரடைந்தது.


Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-