அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...அகில இந்திய அளவில் 458 மாவட்டங்களில் 12 ஆம் வகுப்பு வரையிலான புதிய கண்டுபிடிப்புக்கான சாதனையாளர்களாக 55 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு சிறந்த 30 சாதனையாளர்களுக்கு 2016 ஆம் ஆண்டுக்கான டாக்டர் APJ அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதினை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

இவ்விருது காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஜூபா இக்பாலுக்கும், டெல்லியை சேர்ந்த ஷிரின் ஷேக் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.

ஜூபா இக்பாலுக்கு 20 நிமிடத்தில் கம்பளம் தயாரித்து வடிவமைக்கும் விதமாக தயாரித்த சுழலும் இயந்திரத்திற்காக வழங்கப்பட்டது.

ஷிரீன் ஷேக்குக்கு பள்ளி குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன் டிபன் பாக்ஸில் கை கழுவ வேண்டும் என்றும், சாப்பிட்ட பின் உள் மூடியில் கை கழுவ வேண்டும் என்ற கருத்து கொண்ட டிபன் பாக்ஸை தயாரித்து சுகாதாரமான கருத்தை வெளியிட்டமைக்காக வழங்கப்பட்டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-