அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

மேற்கு தாம்பரத்தில் சேர்ந்து வாழ மறுக்கும் கணவர் வீட்டு முன்பு அமர்ந்து மனைவி 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்.


தாம்பரம்:

மேற்கு தாம்பரம் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் அபிப் முகமது. இவர் தாம்பரத்தில் அரிசி கடை நடத்தி வருகிறார்.

இவருக்கும் சைதாப்பேட்டையைச் சேர்ந்த நஸ்ரின் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

நஸ்ரினுக்கு இரண்டு முறை கரு கலைந்தது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவரை தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் வீட்டுக்கு வந்த நஸ்ரினுடன் சேர்ந்து வாழ திடீரென அபிப் முகமது மறுத்தார். இருமுறை கரு கலைந்ததால் நஸ்ரினுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கூறினார்.

இதையடுத்து அபிப் முகமதுவிடம் பெரியவர்கள் சமாதான பேச்சு நடத்தினர். ஆனால் அதை அபிப்முகமது ஏற்கவில்லை.

இதுகுறித்து நஸ்ரின் தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த நிலையில் நேற்று காலை கணவர் வீட்டுக்கு நஸ்ரின் வந்தார். உடனே அபிப்முகமது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார்.

இதனால் நஸ்ரின் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இன்று 2-வது நாளாக பூட்டப்பட்ட கணவர் வீட்டு முன்பு நஸ்ரின் அமர்ந்த படியே உள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-