அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வெளிநாட்டு வாழ் இந்திய தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு இந்தியாவின் மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும்

தங்களது குடும்பத்தினரை பிரிந்து வெளிநாட்டில் பணியாற்றி உயிரழக்கும் இந்திய‌ தொழிலாளர்கள் உடலை தாயகம் கொண்டு வருவதற்கான செலவை ஏற்று அவர்களது குடும்பத்தினருக்கு உதவ இந்தியாவின் மத்திய மாநில அரசுக்கு நடிகர் விஜய் ஆண்டனி வேண்டுகோள்

நடிகர் விஜய் ஆண்டனி நடைபெற்ற சந்திப்பில் அவர் கூறியதாவது

நான் சின்ன வயதிலேயே ரெம்ப கஸ்டப்ப்பட்டிருக்கேன் 7 வயதில் அப்பாவை இழந்து விட்டேன் எங்க அம்மாதான் என்னை வளர்த்தார்கள் சமூகத்தில் தனியாக வாழ‌ ஒரு பெண் என்பதை கஸ்டப்படுவாங்க என்பதை நான் என் அம்மா மூலமா நான் உணர்ந்திருக்கேன்.

 பணம் இல்லேனா எப்படி இருக்கும் ,பிரண்ட்ஸ்லாம் எப்படி அமைவாங்க என்றெல்லாம் எனக்கு அனுபவம் சொந்தமாவே இருக்கு ஆனால் அதற்காகவெல்லாம் படம் எடுக்கவில்லை மெசெஜ் மட்டும் சொல்றதுக்காக சினிமா எடுக்கல‌ எதார்த்தமாகவே அப்படிப்பட்ட படங்கள் அமையும் என்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை வைத்து தான் படம் எடுக்கிறேன்.


வெளிநாடு வாழ் இந்திய தொழிலாளர்கள் தாங்கள் பணி புரியும் நாடுகளில் மரணமடைந்து விட்டால் அவர்களது உடலை எடுத்து வருவதற்கு ரூ2 லட்சம் வரை செலவு ஆகிறது.

இதனால் பல குடும்பங்கள்  தங்கள் வீட்டை சேர்ந்தவர்கள் வெளிநாட்டி இறந்து விட்டால்  உடலை கொண்டு வருவதற்கான வசதி இல்லாததால‌ அங்கேயே நெஞ்சில் பாரத்தோடும் சோகத்தோடும் இறுதி கடமையை செய்ய சொல்கிறார்கள். 

இறுதியாக கூட அந்த முகத்தை பார்க்க முடியாமல் போய் விடுகிறது என மத்திய மாநில அரசாங்கங்கள் இதற்கு முயற்சி எடுத்து வெளிநாட்டில் பணியாற்றி உயிரழக்கும் தொழிலாளர்கள் உடலை தாயகம் கொண்டு வருவதற்கான செலவை ஏற்று அவர்களது குடும்பத்தினருக்கு உதவ வேண்டும் என்றார்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-