அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 

சர்க்கரை நோய் முற்றிய நிலையில் இருந்தால், உடனே அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுங்கள். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த பல வழிகள் உள்ளன. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஓர் அற்புத மருந்து இதோ!சர்க்கரை நோய் என்பது முற்றிலும் குணப்படுத்த முடியாத நிலை. இந்த சர்க்கரை நோய் தீவிரமானால், உயிரையே இழக்கக்கூடும். எனவே சர்க்கரை நோய் முற்றிய நிலையில் இருந்தால், உடனே அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுங்கள். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த எத்தனையோ வழிகள் உள்ளன.இங்கு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஓர் அற்புத மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து பாரம்பரியமாக சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும். சரி, இப்போது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் அந்த மருந்தை எப்படி செய்வதென்று காண்போம்.


தேவையான பொருட்கள்:
எலுமிச்சை - 6
செலரி வேர் - 300 கிராம்

தயாரிக்கும் முறை:
* முதலில் துருவிய செலரி வேரை, ஒரு மூடியுள்ள சிறு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் எலுமிச்சைகளைப் பிழிந்துவிட்டு, பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும்.
* பின் பெரிய பாத்திரத்தில் நீரை நிரப்பி, அதனுள் அந்த சிறிய பாத்திரத்தை வைத்து, அடுப்பில் இட்டு, நீரை சூடேற்ற வேண்டும். நீர் கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து, 2 மணிநேரம் குறைவான தீயில் வைத்து இறக்க வேண்டும்.
* பின்பு சிறு பாத்திரத்தின் மூடியை திறக்காமல் இறக்கி வையுங்கள். நன்கு குளிர்ந்த பின் அதனை ஒரு ஜாரில் போட்டு சேரிகரித்துக் கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:
இந்த மருந்தை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில், காலை உணவு உண்பதற்கு 30 நிமிடத்திற்கு முன் 1 ஸ்பூன் சாப்பிடுங்கள்.
இதர நன்மைகள்
இந்த மருந்தை உட்கொள்வதால், உடலினுள் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்படுவதோடு, கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் எடையும் குறைவதைக் காணலாம்.
குறிப்பு
இங்கு தயாரிக்க கொடுக்கப்பட்டுள்ள மருந்து 2 மாதத்திற்கு போதுமானது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பட்டிருப்பதை நன்கு காணலாம்.சர்க்கரை நோயாளிகளுக்கு குட் நியூஸ்...
இன்சுலின் சாலட் சாப்பிடுங்க... இயற்கையான முறையில் உங்களது உடலில், இன்சுலின் சுரந்து கொண்டே இருக்கும்... இயற்கையான முறையில் எளிமையான மருந்து இது.
இன்சுலின் சாலட்!
தேவையானவை: இன்சுலின் செடி இலை - 1, ஊறவைத்த வெந்தயம் - 50 மி.கி (இரவே வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.)
செய்முறை: ஒரு தட்டில் ஊறவைத்த வெந்தயத்தைப் போட்டு, அதில் நறுக்கிய இன்சுலின் செடி இலையை சேர்த்துக் கிளறி, ஒருநாளைக்கு மூன்று டீஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டுவரலாம். சாப்பிட்டு முடித்த பின்னர், ஊறவைத்த வெந்தய நீரைக் குடிக்க வேண்டும். காபி, டீ குடிக்கக் கூடாது.
பலன்கள்
இன்சுலின் செடியின் பெயர் கோஸ்டம் (Kostum) வீட்டில் செடி வளர்க்க முடியாதவர்கள், நாட்டுமருந்துக் கடையில் வாங்கிக்கொள்ளலாம்.
இதில் உள்ள கோரிக் ஆசிட், கணையத்தின் பீட்டா செல்களைத் தூண்டும். இன்சுலின் சுரக்க உதவும்.
வெந்தயம், நார்ச்சத்து நிறைந்தது. கெட்ட கொழுப்பை கரைக்கக்கூடியது. இதயத்துக்கு நல்லது. மலச்சிக்கல் தீரும்.
சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-