அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


கடந்த வியாழன் காலையில், ஜித்தாவிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த சவுதியா விமானத்தில் குடும்பத்துடன் பயணித்த முஹமது அப்துல் முத்தலீப் என்ற 63 வயதுடைய தமிழகத்தை சேர்ந்த பிரயாணி விமானம் ஓமன் நாட்டிற்கு மேல் விமானம் பறந்து கொண்டிருந்த போது மரணமடைந்ததை தொடர்ந்து விமானம் மஸ்கட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இன்று வரை மஸ்கட்டில் வைக்கப்பட்டுள்ள அன்னாரது உடல் இன்று சவுதி, ஓமன் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளின் ஒருங்கிணைந்த ஆவண சரிபார்ப்பு வேலைகளுக்குப் பின் இந்தியா எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக உம்ரா ஏற்பாட்டாளர் மக்சூத் சாஹிப் என்பவர் தெரிவித்தார். எனினும், இறந்தவருடைய குடும்பத்தவர்கள் விசா பிரச்சனையின் காரணமாக ஒமனில் உள்நுழைய அனுமதிக்கப்படாததால் அவர்கள் சென்னைக்கு அதே விமானத்தில் சென்றனர்.

Source: Times of Oman

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-