அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


நெட் பேங்கிங், மொபைல் வாலெட்கள் என, டிஜிட்டல் பரி­வர்த்­தனை மேற்­கொள்ள பல வழிகள் இருந்­தாலும், இவற்றை பயன்­ப­டுத்த இணைய வசதி இருக்க வேண்டும். ஆனால், கையில் ஸ்மார்ட் போன் இல்­லாத அல்­லது இணைய வசதி இல்­லாத போது என்ன செய்­வது? இது போன்ற நேரங்­களில், யு.எஸ்.எஸ்.டி., தொழில்­நுட்பம் மூலம் இணைய வசதி இல்­லா­ம­லேயே, பணப் பரி­வர்த்­தனை மேற்­கொள்­ளலாம். 

இதன் அடிப்­ப­டையில், நேஷனல் யூனி­பைடு, யு.எஸ்.எஸ்.டி., பிளாட்பார்ம் இயங்­கு­கி­றது. அனை­வ­ருக்கும் வங்கிச் சேவை அளிக்கும் நோக்­கத்தின் ஒரு பகு­தி­யாக, இந்த வசதி அமை­கி­றது. இது பற்றி ஓர் அறி­முகம்:
யு.எஸ்.எஸ்.டி., என்றால் என்ன?அன்ஸ்­டக்­சர்டு சப்­ளி­மென்ட்ரி சர்வீஸ் டேட்டா என்­பதே, யு.எஸ்.எஸ்.டி., என, குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. மொபைல் போனில், குரல் சேவைகள் மேற்­கொள்ள உதவும், ஜி.எஸ்.எம்., நெட்வொர்க் மூலம் தகவல் பரி­வர்த்­த­னைக்கு உதவும் தொழில்­நுட்­ப­மாக இது விளங்­கு­கி­றது. 

வங்கிச் சேவை உள்ளிட்ட பரி­வர்த்­த­னை­க­ளுக்கு இதை பயன்­ப­டுத்­தலாம். இந்த சேவையில், வங்கி மற்றும் தொலை தொடர்பு நிறு­வனம் இணைந்து, பரி­வர்த்­த­னைக்கு உத­வு­கின்­றன. குறுஞ்­செய்தி வசதி உள்ள எந்த போனிலும், இது செயல்­படும்.

எப்­படி பயன்­ப­டுத்­து­வது?இந்த வச­தியை வங்கிக் கணக்கில் உள்ள தொகையை சரி பார்க்க, மினி ஸ்டேட்மென்ட் பெற, எம்.எம்.ஐ.டி., (மொபைல் வங்கிச் சேவை குறி­யீடு), ஐ.எப்.எஸ்.சி., குறி­யீடு அல்­லது ஆதார் எண் மூலம் பணப் பரி­வர்த்­தனை செய்ய பயன்­ப­டுத்­தலாம். ஒரு முறை பாஸ்­வேர்டு பெற, எம்-பின் எண் பெற மற்றும் வங்கிக் கணக்­குடன், ஆதார் இணைப்பு நிலை அறிய உள்­ளிட்ட வச­தி­க­ளுக்கும் இதை பயன்­ப­டுத்­தலாம்.

என்ன தேவை?இந்த வச­தியை, சாதா­ரண மொபைல் போனிலும் பெற முடியும். ஆனால், மொபைல் வங்கிச் சேவைக்­காக பதிவு செய்து கொண்­டி­ருந்தால் மட்­டுமே, இதை பயன்­ப­டுத்த முடியும். ஆனால், பணம் பெறு­ப­வ­ருக்கு இது கட்­டா­ய­மில்லை. ஆங்­கிலம், தமிழ் உள்­ளிட்ட, 12 மொழி­களில் பயன்­ப­டுத்­தலாம். ஆங்­கிலம் எனில், *99# என, டைப் செய்து அணுக வேண்டும். 

தமிழ் எனில், *99* #23 என, டைப் செய்ய வேண்டும். அதன்பின், பட்­டி­யலில் இருந்து தேவை­யான சேவையை தேர்வு கொள்­ளலாம். 
கட்­டணம் உண்டுஇந்த சேவைக்­காக, சிறிய கட்­டணம் வசூ­லிக்­கப்­படும். பரி­வர்த்­தனை நிக­ழ­வில்லை என்­றாலும், கட்­டணம் உண்டு. ஆனால், ரோமிங் போன்ற கட்­டணம் கிடை­யாது. 

இந்த கட்­டணம், தற்­போது பரி­வர்த்­த­னைக்கு, 0.50 பைசா­வாக குறைக்­கப்­பட்டு உள்­ளது. இது மொபைல் பில்லில் சேர்ந்­து­விடும். இந்த சேவை மூலம் அதி­க­பட்­ச­மாக, 5,000 ரூபாய் பரி­வர்த்­தனை மேற்­கொள்­ளலாம். இந்த பரி­வர்த்­த­னையை துவக்­கிய பின், ரத்து செய்ய முடி­யாது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-