அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர் : பஸ் மேற்கூரைகளில், படிகளில் தினமும் உயிரை பொருட்படுத் தாமல் கிராமப்புற மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். மாணவ,மாணவியர். பள்ளி,கல்லூரி,அலுவலகம் சென்றுவரும் காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்கவேண்டும். என மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் தமிழகஅளவில் பரப்பளவில் மிகச்சிறிய மாவட்டமாகக் காணப்பட்டாலும், கல்வி வசதியில் முன்னோடி மாவட்டமாகத் திகழ்ந்து வருகிறது. குறிப்பாக ஒரு மருத்துவக்கல்லூரி, ஒரு வேளாண்மைக் கல்லூரி, 10க்கும் மேற்பட்ட கலைக் கல்லூரிகள் 10க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள், 10க்கும் மேற்பட்ட பிஎட் கல்லூரிகள், 5க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கல்லூரிகள், 5க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றோடு நூற்றுக்கும் மேற்பட்ட அரசு, தனி யார், மெட்ரிக் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.

அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவியரில் பெரும்பாலானோர் தங்கள் கிராமங்களில் இருந்து தலைநகர் பெரம்பலூர் உள்ளிட்ட அருகிலுள்ள பள்ளிகளுக் குச் சென்று வர போதுமான பஸ் வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். அரசு ஊழியர்கள், வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களோடு போட்டி போட்டுக்கொண்டு அரசுப்பள்ளி மாணவ,மாணவியர் சென்று வருகின்றனர்.

இதில் குறிப்பாக பஸ்பாஸ் உள்ள காரணத்தால் அரசு பஸ்களை மட்டுமே நம்பியுள்ள நிலையில் அடைத்துவைக்கப்படும் துணிமூட்டைகளைப் போல் ஏற்றி திணிக்கப்பட்டு தான் பள்ளி மாணவ, மாணவியர் பஸ்களில் பரிதாபமாகப் பயணித்து வருகின்றனர்.
அதிலும் பெரம்பலூரிலிருந்து நெடுந்தொலைவு செல்லக்கூடிய வேப்படி பாலக் காடு, மலையாளப்பட்டி, பூலாம்பாடி, நூத்தப்பூர், வேப்பந்தட்டை வழியாக வி.களத் தூர், பெருமத்தூர், பொன்னகரம், கொளக்காநத்தம், செட்டிக்குளம், லெப்பைக்குடி காடு, அகரம்சீகூர், சிறுகன்பூர், லாடபுரம் செல்லும் அரசு டவுன்பஸ்களும், மப்சல் பஸ்களிலும் சென்று வருகின்றனர். விபத்துகளைத் தவிர்க்க அளவுக்கதிகமான ஆட்களை ஏற்றிச் செல்லக்கூடாது என்ற உத்தரவுகளை இந்த பஸ்கள் பின்பற்றினால் ஆயிரக்கணக்கான மாணவ,மாண வியர் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய சூழல்தான் ஏற்படும்.

கட்டாயக் கல்விச்சட்டத்தை மத்திய, மாநிலஅரசுகள் அறிவித்து நடைமுறைபடுத்தினாலும் பள்ளிகளுக்குச் சென்று வரக்கூடிய வசதிகளை மேற்கொள்வதில்மட்டும் போதிய கவனம் செலுத்த வில்லை. இதற்காக மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்து, தேவைப்படும் பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு, வேலைக்குச் செல்கிறவர்களின் வசதியை கருத்தில் கொண்டு காலை, மாலை நேரங்களிலாவது கூடுதல்பஸ்களை இயக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள், பெற்றோர் ஆசிரியர்சங்கங்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. இதற்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டு வருகிறது.
நன்றி: தினகரன் நாளிதழ் (28-11-2016)
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-