அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
துபாய் : பிரபஞ்சத்தின் பேரருள், நமது உயிரினும் மேலான எம்பெருமானார் ரஸுலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த மீலாது பெருநாளை முன்னிட்டு துபை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையினரால் பேச்சுப்போட்டி வரும் டிசம்பர் 30, 2016 (1438 ரபியுல் ஆகிர் பிறை 1) அன்று காலை 8 மணி முதல் துபை தேரா ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை மஜிலிசில் நடைபெற இருக்கிறது.

இந்த போட்டிக்கான தலைப்புகள் வருமாறு : பெண்ணுரிமை காத்த பெருமானார், அரபுலகம் அமைதி பெற அண்ணலார் வழியே தீர்வு, பிரபஞ்சத்திற்கோர் அருட்கொடை பெருமானார், இம்மைக்கும், மறுமைக்கும் எம்பெருமானாரே கதி ஆகிய தலைப்புகள் ஆகும்.

முதல் பரிசாக 8 கிராம் தங்க நாணயமும், இரண்டாம் பரிசாக 4 கிராம் தங்க நாணயமும், மூன்றாவது பரிசாக மொபைல் போன் மற்றும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும்.

முதலில் பதியும் 50 நபர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் www.irfaan.netஎன்ற இணையத்தளத்தில் பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு 0250 5859681 /0508313399 /055 5248000 / 050 7752737 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.விதிமுறைகள் :

போட்டியாளர்கள் சுன்னத் வல் ஜமாஅத் அகீதாவிற்கு உட்பட்டவர்களாகவும் 20 வயதை பூர்த்தி செய்தவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

பெண்களுக்கு அனுமதி இல்லை

முதல் 50 விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

ஆலிம் மற்றும் உலமா பெருமக்கள் பார்வையாளர்களாக மட்டுமே வரவேற்கப்படுகின்றனர்.

போட்டியில் பேசும் நிமிடங்கள் மற்றும் இதர விபரங்கள் போட்டியாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும்.

நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-