அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாயில் தொழிலதிபராக உள்ளவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நீலேஷ் பாட்டியா. சுமார் 20 வருடங்களுக்கு முன் தேரா துபை, முஸல்லா ரோட்டில் Dream Way Cafeteria எனும் டீக்கடை ஒன்றைத் துவங்கினார். 

இன்று அவருடைய தொழில் விரிவடைந்து அவருடைய மூன்றாவது நிறுவனமாக Key Fashion Electronics Trading எனும் கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்யும் ஷோரூமை திறந்துள்ளார்.

நீலேஷ் பாட்டியா தன்னுடைய புதிய நிறுவனத்தை திறந்து வைக்க எடுத்த முடிவு வெகுவாக பாரட்டத்தக்கது. ஆம், தன்னுடைய டீக்கடையில் 20 ஆண்டுகளாக நேர்மையாக, சிறப்பாக பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த முஹமது ஷாபி (வயது 50) எனும் பணியாளரையே திறப்பாளராக தேர்ந்தெடுத்து இன்ப அதிர்ச்சியூட்டினார். 

மேலும் கடையை திறந்தவுடன் முஹமது ஷாபியை பொன்னாடை போர்த்தியும் கௌரவித்தார். ஷோரூம் திறக்கப்படும் வரை இந்த செய்தியை யாருக்கும் தெரிவிக்காமலும் சஸ்பென்ஸாக வைத்திருந்தார்.

ஷோரூமை திறந்து வைத்ததுடன் மொபைல் ஹெட்போன் ஒன்றை 200 திர்ஹம் கொடுத்து விலைக்கு வாங்கிய முஹமது ஷாபி தான் துவங்கி வைத்த முதல் வியாபாரத்திற்கு மீதி சில்லறையை கூட பெற்றுக் கொள்ளாததுடன் திறப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்களை இனிப்பு வழங்கி வரவேற்று மகிழ்வதில் பிஸியானார். ஏனிந்த பாசம்?...

நீலேஷ் பாட்டியா பெற்றிருப்பது சிறந்த தொழிலாளர்களை, அதேபோல் அந்த தொழிலாளர்கள் பெற்றிருப்பது தொழிலாளர்களின் தேவைகளை அறிந்து உதவிடும் நல்ல மனம் கொண்ட முதலாளியை!

சில வருடங்களுக்கு முன் முஹமது ஷாபி, 12 வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேறிய தனது மகனை தன் ஏழ்மை சூழலின் காரணமாக துபையில் ஒரு தொழிலாளியாக பணியாற்ற விசா எடுக்க முயன்றபோது, நீலேஷ் பாட்டியா அவர்கள் அம்முயற்சியை தடுத்து நிறுத்தி 15 ஆயிரம் திர்ஹங்களை வழங்கி கல்லூரியில் சேர்ந்து மேற்படிப்பை தொடர உதவியுள்ளார். விளைவு, இன்று முஹமது ஷாபியின் மகன் தகவல் தொழிற்நுட்பத் துறையில் பட்டம் பெற்று 'அல் அய்ன்' நகரில் பொறியாளராக அலுவலக பணியாற்றுகின்றார்.

தனக்கு கிடைத்த மிகப்பெரும் கௌவரத்தால் கண்கள் பணிக்க, உள்ளம் சந்தோஷத்தால் நிறைந்திருக்கும் முஹமது ஷாபியை நீலேஷ் அவர்கள் மட்டுமல்ல முஹமது ஷாபியுடன் பணியாற்றும் சக தொழிலாளர்களும் அவரின் எளிமையான குணத்திற்காக கொண்டாடுகின்றனர். 

இந்த செய்தி அமீரகத்தின் முன்னணி பத்திரிக்கையில் வெளியானதன் மூலம் இன்னும் அவர்களிருவரும் போற்றப்படுகின்றனர், இதுவும் ஒருவகை கண்ணியமான அங்கீகாரம் தான்.

போட்டோஷாப் டீக்கடை மாடுகள் என்னதான் முயன்றாலும் உள்ளத்தால் இணைந்த இந்தியர்களை பிரிக்க முடியாது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.

Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-