அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசாரின் ரோந்து பணி தீவிரப்படுத்தப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல்சந்திரா கூறினார்.

போலீசாரின் ரோந்துப்பணி...

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல்சந்திரா நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– பெரம்பலூர் மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் தொடர்பாக நடப்பாண்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 104 வழக்குகளில் 97 வழக்குகளுக்கு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் களவுபோன நகைகளில் 93 சதவீதம் மீட்கப்பட்டுவிட்டது. மேலும் திருட்டு, உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு போலீசாரின் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்படும்.

குண்டர் சட்டத்தில் 18 பேர் கைது

மேலும் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை பிடிக்க பெரம்பலூர் மாவட்ட எல்லைகளில் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குற்ற சம்பவங்களை தடுக்க ஆஸ்பத்திரிகள், சூப்பர் மார்க்கெட்டுகள், கடைகள், நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதுவரை இல்லாத வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 18 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட போலீசாரால் அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ்–அப் எண்ணிற்கு பல்வேறு புகார்கள் வருகின்றன. இது தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தம்பிராஜன், குற்றப்பதிவேடுகள் பிரிவு இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-