அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பொது சிவில் சட்டம் ஏன் ? எதற்கு ?? என்ற அனைத்து கட்சி கருத்தரங்கம் மைசூர் பவன் அரங்கத்தில் நடைபெற்றது .

மஜக , திமுக , SDPI , நாம் தமிழர் , விசிக , முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்து அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள் .


SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் .மறுமலர்ச்சி திமுக சார்பில் நானும் அண்ணன் தாயகம் சுரேஷ் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினோம் .

பொது சிவில் சட்டம் என்பது சாத்தியமற்ற ஒன்று . அனைவருக்கும் ஒரே சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பது பாஜகவின் நோக்கம் அல்ல சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்க வேண்டும் என்பது தான் அவர்களது நோக்கம் .

தாலி கட்டிய மனைவியை மறைத்து திருமணமே ஆகவில்லை என்று சொன்ன மோடி முஸ்லீம் பெண்கள் பாதிக்கப்படுவதாக நீலி கண்ணீர் வடிக்கிறார் என்று பாஜகவின் கோர முகத்தை தோலுரித்து பேசினேன் .

என்னோடு அண்ணன் ருத்ரமூர்த்தி , நண்பர்கள் செந்தில் , பெர்லின் உள்ளிட்ட கழக தோழர்கள் கலந்து கொண்டனர் .

வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இதே பொது சிவில் சட்டத்தை கொண்டுவர முனைந்த போது ஆரம்ப நிலையிலேயே மதிமுக எதிர்த்தது அந்த நிலைப்பாட்டில் இப்போது வரை எந்த மாற்றமுமில்லை .

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-