அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெண்களுக்கு இஸ்லாமிய தலாக் முறை பாது காப்பற்ற சூழலை உருவாக்கி இருப்பதாகவும் இஸ்லாம் பெண்ணுரியை பறிப்பதாகவும் இஸ்லாத்தை பற்றி அடிப்படை அறிவுகள் இல்லாதவர்கள் உளறிவரும் நிலையில் பெண்ணினத்திற்கு பெருமை சேர்க்கும் ஒரு முடிவை பெண்ணினத்தை .இஸ்லாம் கண்ணன காக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு நிகழ்வை சவுதி அரேபியாவி ஜீசான் மாகணத்தில் காணமுடிந்தது


திருமணத்தின் போது பெண்களுக்கு மஹர் கொடுக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டாய சட்டம்


இது சவுதி அரேபியா போன்ற நாடுகளில் மிகுந்த முக்கியத்துவத்துடன் கடைபிடிக்க படுகிறது


பெண்களுக்கு மணகொடை வழங்கும் தகுதி இல்லாத தால் பல இளைஞர்களின் திருமணம் சவுதி அரேபியாவில் தாமதம் ஆகிறது


இது ஒரு பக்கம் இருக்க


சவுதி அரேபியாவின் ஜீசான் மாகநத்தில் திவால் மாவட்டத்தில் உள்ள கபீலா தலைவர்களுக்கு சில புகார்கள் வந்தது


திருமணத்தின் போது மஹர் தொகை அலட்சிய படுத்த படுவதாகவும் பேருக்கு சிலர்கள் சிறு தொகையை மட்டுமே மணகொடையாக வழங்குவதாகவும் வந்த புகாரை கபீலா தலைவர்கள் வீசரித்தனர்


அதனை தொடர்ந்து குறிப்பிட்ட மாவட்டத்தில் உள்ள முக்கியஸ்தர்களை கலந்து ஆலோசித்த கபீலா தலைவர்கள் பின்வருமாறு மணகொடையின் குறைந்த பட்ச அளவை நிறுணயித்தனர்


முதல் முறையாக திருமணம் செய்யும் பெண்ணுக்கு சுமார் பத்து லட்சம் ரூபாய் (60000 ரியால்) மஹராக தரவேண்டும் எனவும் மறுமணம் செய்யும்பெண்ணுக்கு சுமார் ஐந்து லட்சம் ரூபாய்(30000 ரியால்) மஹராக தரவேண்டும் என்றும் நிறுணயித்தனர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-