மத்திய டில்லியில் மிகவும் பிரபலமான குறித்த வீதியின் பெயரை வடமேற்கு இந்தியாவின் இந்து மன்னரான மகாராணா பிரதாப்பின் பெயரில் மாற்றியமைக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகிறது. குறித்த நடவடிக்கைக்கு மத்திய அரசின் அனுமதி தேவையற்ற நிலையில் டில்லி மாநகர சபையில் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் பி.ஜே.பியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அண்மையில் கண்டியில் இடம்பெற்ற பேரணியில் வைத்து இலங்கையில் வீதிகளுக்கு முஸ்லிம், தமிழ் பெயர்கள் சூட்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என பொது பல சேனா உட்பட்ட கடும்போக்கு சிங்களவாத அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்க அதேவேளை கடந்த வருடம் மேலும் ஒரு முகலாய மன்னர் (அக்பரின் பேரன்) ஓளரங்கசீபின் பெயரில் இருந்த வீதியொன்றும் பெயர் மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.