இனி விசிட் விசாவில் வரும் பெண்கள் கண்டிப்பாக ரிட்டர்ன் டிக்கெட் வைத்திருப்பதுடன் 4 நட்சத்திர ஹோட்டலில் அறை முன்பதிவும் செய்திருக்க வேண்டும், மேலும் 10 நாட்களுக்கு மட்டுமே ஓமனில் தங்க அனுமதிக்கப்படுவர். மேலும், நாட்டை விட்டு வெளியேறினால் மட்டுமே மீண்டும் விசிட் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும். முன்பு 30 நாட்கள் வரை விசிட் விசாவில் தங்க அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த மாதம், தாய்லாந்து போலீஸூடன் இணைந்து ஓமன் போலீஸார் எடுத்த கூட்டு நடவடிக்கையின் வாயிலாக, தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட பெண்கள் மீட்கப்பட்டதுடன் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட 3 தாய்லாந்து நாட்டவர்களும் பிடிபட்டனர்.
Source: Gulf News
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.