அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாயில் உலக வர்த்தக மையத்தில் 'பிக் 5' என்ற சர்வதேச அளவிலான கட்டுமானத்துறை கண்காட்சி 21ந்தேதி முதல் 24ந்தேதி வரை நடைபெற்றது.

 இந்த நிகழ்ச்சியில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமானத்துறை தொடர்பான பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுனவத்தினர் பங்கேற்றனர்.

இக்கண்காட்சியில் உலகம் முழுவதுமிருந்து கட்டுமான துறை தொடர்பான தொழிலதிபர்கள், நிபுணர்கள் பார்வையாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

தொடர்ச்சியாக‌ கட்டுமானத்துறை தொடர்பான‌ கருத்தரங்குகள் நடைபெற்றது. மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்போர்க்கு நிறுவனங்கள் சார்பில் பரிசுகளும் வழங்கப்பட்டது.

இந்தியாவிலிருந்து 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றனர் அமீரக முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு அவரகளை ஈர்க்கும் வகையில் தற்போது துபாயில் மேக் இன் இந்தியா அரங்கமும் அமைக்கபட்டிருந்தது. 

இந்திய தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை இணை செயலாளர் அதுல் சதுர்வேதி, துபாயில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் கான்சல் ஜெனரல் அனுராக் பூசன் உள்ளிட்டோர் பங்கேற்று இந்திய தொழில் நிறுவன அரங்கங்களை திறந்து வைத்தனர்.

இஇபிசி இந்தியாவின் டெபுடி டைரக்டர் ராஜகோபலன் துபாயில் கண்காட்சியில் இந்திய நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் ஒருங்கினைத்திருந்தார். 

4 ஆண்டுகளாக‌ தொடர்ந்து ஒருங்கினைப்பு பணிகளை செய்து வருவது குறிப்பிடதக்கது மேலும் கடந்த 2 ஆண்டுகளாக இஇபிசி இந்தியா, ஐபிஇஎப் உடன் இணைந்து இந்திய கட்டுமானத்துறை குறித்து சர்வதேச அளவில் விளக்கி வருகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-