அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சவூதி அரேபியா, நவ-08
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் ஏற்பட்ட நிதி நெருக்கடி சவுதியை பலமாக பாதித்தது அறிந்ததே. இந்த பொருளாதார பிரச்சனைகளிலிருந்து மீண்டுவர பல்வேறு மாற்று நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாலும் முதன்முதலாக சவுதி அரசு 87 பில்லியன் டாலர் அளவுக்கு பற்றாக்குறை பட்ஜெட் போட வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டது.

பொருளாதார நெருக்கடியின் விளைவாக சவுதி அரசின் ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வந்த பல தனியார் நிறுவனங்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய இயலா நிலைமை அரசுக்கு ஏற்பட்டதால் தனியார் நிறுவனங்கள் அதன் தொழிலாளர்களுக்கும் சம்பளத்தை தர இயலாத நிலைக்கு தள்ளப்பட்டனர் மேலும் பல தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டதாலும் பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்து தாயகம் திரும்பினர்.

இந்நிலையில், எதிர்வரும் 2016 டிசம்பர் மாத இறுதிக்குள் தனியார் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய அனைத்து நிலுவை தொகைகளையும் கொடுத்து நேர் செய்திடும் நடவடிக்கைகளை சவுதி அரசு மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் தொழிலாளர்கள் நிலுவை சம்பளத்தை முழுமையாக பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் சவுதி பின்லாடின் நிறுவனத்திற்கு சவுதி அரசு நிலுவைத் தொகையை ஒரளவு ஒதுக்கியதை தொடர்ந்து சுமார் 70,000 தொழிலாளர்களுக்கான சம்பள பாக்கிகள் அனைத்தும் முழுமையாக கொடுக்கப்பட்டன. எனினும், மற்றொரு கட்டுமான நிறுவனமான சவுதி ஓஜர் குழுமம் நிலுவைத் தொகை பெற்றதை குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. 

மேலும் விரிவான தகவல்களுக்கு 
http://www.arabnews.com/node/1007856/saudi-arabia
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 
அதிரை நியூஸ்: 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-