அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,நவ.9:
8ம்தேதி நள்ளிரவு முதல் ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பால் பெரம்பலூரே அல்லோலப்பட்டுள்ளது.
8ம்தேதி இரவு முதல் ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது. 9,10 தேதிகளில் ஏடி எம் சென்டர்கள் திறக்கப்படாது. 9ம்தேதி வங்கிகள் திறக்காது, டிசம்பர் இறுதிக்குள் ரூ500, ரூ1000 நோட்டுகளை மறக்காமல் மாற்றிக் கொள்ள வேண்டும். மருத்துவமனை, தபால் அலுவலகம், ரயில் நிலையம், வங்கிகள், மெடிக்கல் ஷாப் ஆகியவற்றில் தான் 500 ரூபாய், 1000ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என பரபரப்பாக பேசப்பட்டது.

இதனால் பெரம்பலூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி, ஐஓபி போன்ற தேசியமயமாக்கப்பட்ட வங் கி க ளி லும், பணத்தை டெபா சிட் செய் யக் கூ டிய வசதி கொண்ட இதர வங் கி க ளின் ஏடி எம் சென் டர் க ளில் பொது மக் கள் திரண்டு பழைய 1000 மற் றும் 500 ரூபாய் நோட்டு களை வங் கி க ளில் டெபா சிட் செய் த தால் மக் கள் கூட் டம் அலை மோ தி யது.
பெரம்பலூர் பெட்ரோல் பங்குகளில் ரூ500க் கும், ரூ1000க் கும் மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்பட் டது. நூறு இரு நூறு ரூபாய்க ளுக் கெல்லாம் சில்லரைத் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் டீசல் தரப்படவில்லை. சில பங்குகளில் ரூ100 ரூ200க்கு மட்டுமே பெட்ரோல் டீசல் வழங்கப் பட் டது.இதனால் சல சலப்பும் ஏற்பட்டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-