அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், நவ.2:
பெரம்பலூரின் பாரம் பரியமிக்க வாரச் சந்தை இட மாற்றம் செய்யப் பட்டு வரும் 8ம்தேதி முதல் உழவர் சந்தை அருகே செயல் பட உள்ளது. அரசு மருத்துவமனை விரிவாக்கத்தால் அறநிலையத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பெரம்பலூர் நகருக்கான வாரச்சந்தை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் கிழக்கு பகுதியில் உள்ள அற நிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நிலத்தில் இயங்கி வருகிறது. இங்கு செவ்வாய் தோறும் வாரச் சந்தை நடந்து வரு கி றது. இதில் பெரம்பலூர் மாவட்ட வியாபாரிகள் மட்டுமின்றி வெளியிடங் க ளில் இருந் தும் காய் க றி க ளைக் கொண்டு வரும் 200க்கும் மேற் பட்ட வியா பா ரி கள் பய ன டைந்து வந் த னர்.
காய் க றி கள் மட் டு மன்றி மளி கைப் பொருட் கள், கீரை வகை கள், பாய், காய் கறி நாற் று கள், பழ வ கை கள், இனிப்பு கார வகைகள் உள் பட அனைத்து வகை யான பொருட் க ளும் விற் கப் பட்டு வந் தன. இந்த வார சந் தைக்கு பெரம்பலூர் மற் றும் சுற் று வட் டார மளிகை, காய் கறி கடை சிறு வியா பா ரி க ளும் வந்து கொள் மு தல் செய் வ துண்டு. நக ரப் பொது மக் கள், சுற்று வட் டார கிரா மத்து மக் கள் இந்த வாரச் சந் தை யில் தங் க ளுக் குத் தேவை யான புத் தம் புது காய் க றி களை குறைந்த விலைக்கு வாங் கிச் சென்று வந் த னர்.
இந் நி லை யில் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் விரிவாக்கப் பணிகளுக்காக, மாவட்ட நிர்வாகம், சந்தைக்குப் பயன் படுத்தப் ப டும் நிலத்தை வழங் கும் படி அற நி லை யத் துறை யி டம் கேட் டி ருந் தது. இதற்கு அற நி லை யத் துறை ஒப் பு தல் அளித் துள் ள தால், இங்கு 40 ஆண் டு க ளுக் கும் மேலாக இயங்கி வந்த வார சந்தை வடக்கு மாதவி சாலையில் உழவர் சந்தைக்கு தென் பு றம் அற நி லை யத் து றைக்கு சொந் த மா க வுள்ள காலி நிலத் திற்கு இட மாற் றம் செய் யப் ப டு கி றது. இத னை யொட்டி உழ வர் சந் தைக்கு தென் பு ற முள்ள புதர் கள் அகற்றி சீர மைத்து, வாரச் சந் தைக் கான கடை கள் இடம் பெ றும் வகை யில் மண் மே டை கள் வரிசை வரி சை யாக அமைக் கப் பட் டுள் ளது. மேலும் நேற்று நடந்த செவ்வாய் வாரச் சந்தை வியாபாரிகளுக்காக, வாரச் சந்தை இட மாற் றம் குறித்த அறி விப்பு துண் டுப் பி ர சு ர மாக வழங் கப் பட் டுள் ளது. இதில் ஒப் பந் த தா ரர் ஒரு வ ரது பெய ரில், வரு கிற 8ம்தேதி முதல் வடக் கு மா தவி சாலை உழ வர் சந் தைக்கு அருகே செவ் வாய் வாரச் சந்தை இட மாற் றம் செய் யப் ப டு கி றது எனத் தெரி விக் கப் பட் டுள் ளது.
இது கு றித்து பெரம் ப லூர் நக ராட்சி ஆணை யர் முரளி கூறு கை யில், வாரச் சந்தை அற நி லை யத் து றை யின் கட் டுப் பாட் டில் உள் ளது. அது நக ராட் சி யின் கட் டுப் பாட் டில் வராது. வாரச் சந் தையை சுத் தப் ப டுத் தும் பணி க ளுக் காக வாரச் சந் தைக் காக பெறப் ப டும் தொகை யில் 15 சத வீ தத் தொகை வழங் கு வார் கள். இப் போது அது வும் தரு வ தில்லை.
அற நி லை யத் து றை தான் இட மாற் றப் பணி களை மேற் கொள் கி றது என் றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-