அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
8  முஸ்லீம் விசாரணை கைதி போலீசாரால் திட்டுமிட்டு சிறைக்கு வெளியே அழைத்து செல்லப்பட்டு கொல்லப்பட்டனரா? நடந்ததாக சொல்லப்படுவது போலி என்கவுண்ட்டரா? என்ற குழப்பம் எழுந்துள்ளது.

சென்னை: போபாலில் 8    முஸ்லீம் விசாரணை கைதி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் சர்ச்சை வெடித்துள்ளது.   விசாரணை கைதியை ஆயுதங்களால் சுட்டதாக கூறுகிறது மபி காவல்துறை; ஆனால்  முஸ்லீம் விசாரணை கைதிகளிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை என்கிறது மபி அரசு. இதனால் நடந்தது போலி என்கவுண்ட்டர்தானோ என்ற சர்ச்சை வெடித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபால் சிறையில் இன்று அதிகாலை 4 மணியளவில் சிறைக் காவலரை கொன்றுவிட்டு 8  முஸ்லீம் விசாரணை கைதி போர்வையை கயிறாக்கி தப்பி ஓடியதாக கூறப்பட்டது. இதனையடுத்து 5 சிறை காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மத்திய பிரதேச அரசு அறிவித்தது.
VIDEO : Breaking News : போபால் சிறையில் இருந்து தப்பி ஓடிய   முஸ்லீம் விசாரணை கைதி 8 பேர் சுட்டுக்கொலை

சிறையில் இருந்து  
விசாரணை கைதி தப்பி 8 மணிநேரத்திலேயே 8 பேரும் போபால் புறநகரில் நடந்த என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. போலீசார் என்கவுண்ட்டர் நடத்தி சுட்டுக் கொல்லும் அளவுக்கு 8  விசாரணை கைதிகளும் ஆயுதங்கள் வைத்திருந்தனரா? எத்தனை மணிநேரம் இந்த என்கவுண்ட்டர் நடந்தது? என்பது குறித்து எந்த தகவலும் முதலில் வெளியாகவில்லை.

என்கவுண்ட்டரின் போது 
விசாரணை கைதி களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுத விவரங்களும் இல்லை. ஆகையால் போலீசாரே திட்டமிட்டு சிறையில் இருந்து அழைத்து சென்று 8  விசாரணை கைதிகளையும் சுட்டுக் கொன்றனரா? அல்லது 8    விசாரணை கைதிகளும் பதுங்கியிருந்த போது சுற்றி வளைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனரா? என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறுவது உண்மையா? என்ற சந்தேகங்களும் எழுந்தன.


இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பிரதேச மாநில காவல்துறை தலைவர் யோகேஷ் சவுத்ரி,  
விசாரணை கைதிகள் எங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் என்கவுண்டர் செய்தோம் எனக் கூறியுள்ளார். ஆனால் மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் பூபேந்திர சிங், போபால் சிறையிலிருந்து தப்பிச் சென்ற 8 விசாரணை கைதி களிடம் இருந்து துப்பாக்கி போன்ற ஆயுதம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

இதனால்  
விசாரணை கைதி 8 பேரும் போலி என்கவுண்ட்டரில்தான் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட 8 பேரும் ஒரு சில வாரங்களில் விடுதலையாக கூடியவர்களாம் .. 

இத்தனை நாள் சிறையில் இருந்தவன் விடுதலையாகும் நேரத்திலையா தப்பிச்சி போக நினைப்பான்...? 

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் காரண்டுகம்பியை கடிச்சி தற்கொலை பண்ண மாதிரி... ல இருக்கு.. .

சரி அந்த சிறைத்துறை அதிகாரியை எதுக்கு கொன்னாங்க?
#போலி_என்கவுண்டர் ?!!

மத்திய பிரதேசம் மாநிலம் போபால் மத்திய சிறையிலிருந்த முஸ்லிம்கள் 8 பேர் நேற்று ஒரு சிறைக்காவலரை கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டதாக முதலில் செய்தி வந்தது...
இன்று காலை மேற்படி 8 தீவிரவாதிகளும் சுட்டுக்கொலை என்று செய்தி வந்தது...
இவ்வளவு நாள் சிறையிலிருந்தவர்கள் தப்பிக்க காரணம் என்ன ??

தப்பியோடியவர்கள் அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து போலிஸ் சுட்டுக் கொன்றது போல் புகைப்படம் வெளியாகியுள்ளதே???
மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் சுட்டுக்கொல்லப்பட்டவர்களிடம் ஆயுதம் எதுவும் இல்லை என்கிறார் ..
.
காவல்துறை தலைவர் தீவிரவாதிகள் சுட்டதால் திருப்பி சுட்டோம் என்கிறார்...

பிஜேபி அதற்குள் காவல்துறைக்கு வாழ்த்து சொல்லி அறிக்கை விடுகிறது....
இந்த போலி என்கவுண்டர் மூலம் உ.பி.யில் ஆட்சியை பிடிக்க ஆர்.எஸ்.எஸ்.சதித்திட்டம் தீட்டுகிறதா ??

பொது சிவில் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை திசை திருப்புவதற்காக,ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்தின் மீதும் களங்கம் ஏற்படுத்த மத்திய,மாநில ஆளும் பாஜக அரசின் போலி என்கவுண்டர் நாடகமா !???

ஒட்டு மொத்தத்தில் இப்போலி என்கவுண்டருக்காக !?? ஒரு காவலரின் உயிரும், 8 இஸ்லாமியர்களின் உயிரும் மனிதாபிமானமற்ற முறையில் பறிக்கப்பட்டுள்ளது....

சவுதி அரேபியாவில் விசாரித்து தான் எந்த வித பாரபட்சமுமின்றி மரண தண்டனை வழங்குவார்கள்...அந்த சட்டத்தை கொடிய சட்டம் என்று தொண்டை கிழிய கத்தும் நாம் நம்முடைய நாட்டில் தொடர்ந்து கொத்து கொத்தாக நடத்தப்படும் போலி என்கவுண்டர்களுக்கு ஆதரவளிப்பது ஏனோ ????

M.S.M.நிஜாமுதீன்,

வழக்கறிஞர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-