அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பாடாலூர் அருகே பட்டப்பகலில் பெண்ணை தாக்கி 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

6 பவுன் தங்க சங்கலி பறிப்பு


பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட மங்கூன் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி சரோஜா (வயது 55). இவர் நேற்று மதியம் மங்கூனில் இருந்து குரூர் செல்லும் சாலையில் உள்ள தனது வீட்டின் முன்பு கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

அதனை நோடடமிட்ட மர்மநபர்கள் சரஜோவின் தலையில் கட்டையால் தாக்கி, அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயமடைந்த சரோஜாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

வலைவீச்சு


இதுகுறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் பெண்ணை தாக்கி 6 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-