அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...வி.களத்தூர்.நவ 10. 
 நமது ஊர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்டவர் அக்கவுண்ட் ஓப்பன் செய்து உள்ளனர். V.களத்தூர் மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டார மக்கள் ( பசும்பலூர்,அகரம்,திருவாளந்துறை,அயன் பேரையூர்,தைக்கால்,நெய்குப்பை,மரவனத்தம்,பிம்பலூர்,N.புதூர்,)பலர் வங்கி கணக்கு வைத்து உள்ளனர்.
நேற்று முன் தினம் மோடி அரசு திடீரென ₹500,₹1000 நோட்டுகள் அனைத்தும் செல்லது எனவும், இதை வைத்து உள்ளவர்கள் உங்கள் பகுதி வங்கியில் மாற்றி கொள்ளலாம் என அறிவித்தார். இதனால் இன்று 9 மணிக்கே பேங்க் வாசலில் பலர் திரண்டனர். 10 மணிக்கு பேங்க் திறக்கப்பட்டதும் பலர் உள்ளே சென்றனர். மேலும் மீதி பாதி கூட்டம் வெளியில் இருக்கிறது. இதனால் இன்று நமதூர் I.O.பேங்க் என்றும்  இல்லமால் இன்று மிகவும் பரபரப்பாக காணப்படு கிறது. 
கூட்டம் கட்டுக்கடங்காதால்  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
மக்களை வரிசையில் நின்று பணம் தற்சமயம் மாற்றி வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-