அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


நேற்று இரவு 12 மணி முதல் ரூ. 500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது எனவும், இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் பிரதமர் மோடி நேற்று இரவு அறிவித்தார். இந்த நடவடிக்கையின் காரணமாக புதியதாக புது வடிவத்துடன் ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு மாற்றம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில், நாடுமுழுவதும் உள்ள வங்கிகளில் நாளை முதல் மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து வங்கிகளுக்கும் சுற்றிக்கை அனுப்பியுள்ளது.

இன்று முதல் புதிய ரூபாய் நோட்டுகள் அந்தந்த வங்கிகளுக்கு கொண்டு சேர்க்கும் பணியில் ரிசர்வ் வங்கி முழுவீச்சில் ஈடுபட்டுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத்தொடர்ந்து, வங்கிகளில் பொதுமக்கள் பணத்தை மாற்றிக்கொள்வதற்கான புதிய படிவத்தை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது. மேலும் வங்கிகளில் இந்த படிவத்தை பெற நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கவேண்டியிருக்கும் என்பதால், உங்கள் சிரமத்தை தவிர்க்க இதனை பதிவிறக்கம் செய்து படிவத்தை நிரப்பி கொண்டு செல்லலாம்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-