அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்: டாஸ்மாக் மதுபானக் கடையில் 500 ரூபாய் நோட்டை வாங்க மறுத்ததால், மது பிரியர்கள் சாலையில் கற்களைப்போட்டு மறியலில் ஈடுபட்டனர். பெரம்பலூர் அருகேஅம்மாபாளையம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் கையிலிருந்த ரூ.100, 200க்கு மது வாங்கிக்குடித்த சிலர், மேலும் மது குடிக்க விரும்பினர். இதற்காக 500 ரூபாய் நோட்டை கொடுத்து மது கேட்டனர்.

நோட்டு ெசல்லாது என கூறி டாஸ்மாக் ஊழியர் மது கொடுக்க மறுத்தார். இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஊழியர் கடையை மூடிவிட்டார். ஆத்திரமடைந்த மதுப்பிரியர்கள் கூச்சலிட்டனர். சிலர் அங்கிருந்த கற்களை எடுத்து சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, பெரம்பலூர்-துறையூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்குவந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸ்காரர் சவுந்தர்ராஜ், மறியலில் ஈடுபட்டவர்களை எச்சரித்தார்.

ஆனால் போராட்டம் நடத்தியவர்கள் அவருடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ேபாதையில் இருந்த அவர்களை போலீஸ்காரரால் சமாளிக்க முடியவில்லை. தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்குவந்த சிறப்பு எஸ்.ஐ. மற்றும் போலீசார் சமரசம் செய்து மறியலை கைவிடசெய்தனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதுவுக்காக நடந்த மறியலால் பரபரப்பு ஏற்பட்டது-  

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-