அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே சேவை அடிப்படையில் செயல்படும் சேவா ஸ்கேன் மையம்.
தனியார் மருத்துவமனை மருத்து வர்கள் என்றாலே லாபநோக்கில் செயல்படுகிறவர்கள் என்ற தவறான அடையாளத்தை உடைத்துள்ளார் மதுரை அரசரடியை சேர்ந்த தேவகி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை மருத்துவர் டாக்டர் நாகேந் திரன். மதுரை அரசு ராஜாஜி மருத் துவமனைக்கு அருகில் செயல்படும் இவரது சேவா ஸ்கேன் சென்டரில், அரசு மருத்துவமனைகளை காட்டி லும் குறைந்த கட்டணத்தில் ஏழை நோயாளிகளுக்கு ஸ்கேன் எடுத்து கொடுக்கப்படுகிறது.


அருகில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுக்க நோயாளிகளிடம் ரூ.750, எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க ரூ.2,500 முதல் ரூ.3,500 கட்டணம் பெறப் படுகிறது. ஆனால், இவரது ஸ்கேன் சென்டரில் சிடி ஸ்கேன் எடுக்க ரூ.550, எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க ரூ.1,500 மட்டுமே பெறுகிறார். அரசு மருத்துவமனை யில் ஸ்கேன் எடுக்க வரிசை அடிப் படையில் நோயாளிகள் காத்தி ருக்க வேண்டும். அதனால், ஸ்கேன் எடுக்க, ரிப்போர்ட் வர குறைந்த பட்சம் 5 முதல் 10 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். அதனால், ஏழை நோயாளிகள் தனியார் மருத் துவமனையில் ஸ்கேன் எடுக்க பணமில்லாமலும், அரசு மருத்துவ மனையில் உடனுக்குடன் ஸ்கேன் எடுக்க முடியாமலும் தனக்கு என்ன நோய் என்றே தெரியாமலேயே தொடர்ந்து தற்காலிக சிகிச்சை பெறும் அவலம் ஏற்படுகிறது.


இதுகுறித்து மருத்துவர் நாகேந் திரன் கூறியதாவது: எம்பிபிஎஸ் முடித்ததும், கை நிறைய சம்பா திக்க வேண்டும் என்ற எண்ணத்தில், லண்டன் சென்று படித்து அங்கு 4 ஆண்டுகள் பணிபுரிந்தேன். என் னுடைய தந்தை ஆசிரியர் என்ப தால், அவருக்கு நான் வெளிநாட்டில் தங்கி பணிபுரிவது பிடிக்கவில்லை. அவர் என்னை அழைத்து நமது ஊரிலேயே வந்து மருத்துவர் தொழில் பாருப்பா என்றார்.


அதனால், 1998-ம் ஆண்டு பிளாக் அன்ட் ஒயிட் ஸ்கேன் மையம் தொடங் கினேன். ஏழை நோயாளிகளுக்கு சலுகை விலையில் ஸ்கேன் எடுத் துக் கொடுத்தேன். கடந்த 2005-ம் ஆண்டு ஏழை நோயாளிகள் சலுகை விலையில் அல்ட்ரா, சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதற்காகவே அரசு மருத்துவமனை அருகே தனி யாக சேவா ஸ்கேன் மையத்தை சேவை அடிப்படையில் தொடங்கி னேன். தற்போது இங்கே வந்தால் எந்த நோயையும் கண்டறியக்கூடிய வசதிகள் உள்ளன.


கலாமின் விருப்பம் நிறைவேற்றம்
புற்றுநோய் மருத்துவமனையைத் தொடங்கியபோது, குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமை வைத்து திறக்க திட்டமிட்டோம். ஆனால், அவரை அணுகியபோது தனியார் மருத்துவமனை என்பதால் எங்களை பார்க்கவே மறுத்துவிட்டார். எனது சேவையை அவரது கவனத்துக்கு கொண்டு சென்றேன். அதன்பிறகு அவர் ஒரு குழுவை அனுப்பி மதுரையில் விசாரித்துள்ளார். உண்மைதான் என்பது தெரிந்தபிறகு அப்துல் கலாம் எங்களது புற்றுநோய் மருத்துவமனையைத் திறக்க வந்தார். அப்போது, இது மட்டும் நீங்கள் செய்தால் போதாது என்றவரிடம், இரு கிராமங்களை தத்தெடுக்கிறோம் என்றோம். கலாம் விரும்பியபடி, மதுரை அருகே அச்சம்பத்து, பண்ணைக்குடி கிராமங்களை தத்தெடுத்து இலவச மருத்துவ சிகிச்சை, கழிப்பறை கட்ட, சுகாதார வசதிகளை ஏற்படுத்த உதவிகளை செய்கிறோம். தற்போது அந்த கிராமங்கள் சுகாதாரத்தில் இந்தியாவுக்கே முன் உதாரணமான கிராமங்களாக இருக்கின்றன என்றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-