அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் அமீரக 45வது தேசிய தினக் கொண்டாட்டம்!
துபாய் ஈமான் அமைப்பு வரும் டிசம்பர் 2, 2016 வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அமீரகத்தின் 45-வது தேசிய தின விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இந்த நிகழ்ச்சி துபாய் ஜாபில் பூங்காவில் ( ஜாபிலியா மெட்ரோ ஸ்டேசன் அருகில் ) ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா அவர்கள் தலைமையில் நடைபெற இருக்கிறது.

அன்றைய தினம் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் ஆகியோருக்கு தனித்தனியே பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும், அதனைத் தொடர்ந்து பரிசுகளும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதிர்ஷ்டசாலிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும்.

காலை 9 மணிக்குள் வரும் முதல் 25 குடும்பத்தினருக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும்.
மதியம் சுவையான பிரியாணிக்கும், மாலையில் டீ வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 8.30 மணிக்கு பஸ் தேரா சுற்றுலா பஸ் நிலையத்தில் இருந்தும், அஸ்கான் டி பிளாக் அருகில் இருந்தும் புறப்படும்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் அதற்கான அனுமதிச் சீட்டை கீழ்க்கண்ட நபர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்
தேரா : படேஷா பஷீர் : 050 54 54 140 / ஷமீம் : 050 93 84 746
டி பிளாக் : காயல் ஈசா : 055 4063 711
ஷார்ஜா : ஜமால் முஹைதீன் : 055 800 79 09
அஜ்மான் : தமீம் 050 2841 878
முதுவை ஹிதாயத் : 050 51 96 4330 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-