அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர் அருகே லாரி மீது கார் மோதியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
குன்னம்:

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கார்மேகம் (வயது 48). இவரது மனைவி நாகஜோதி (43). இவர்களுக்கு நிதிஷ் கண்ணன், பிரசன்ன கண்ணன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு இவர்கள் தங்கள் சொந்த காரில் குடும்பத்தோடு திருப்பதி கோவிலுக்கு சென்றனர். பின்னர் நேற்று வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு பெரம்பலூர் நான்கு ரோடு சாலை மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே சென்னையிலிருந்து மதுரையை நோக்கி இரும்பு தகடு ஏற்றி கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. இதில் எதிர்பாராத விதமாக லாரியின் பின்புறத்தில் கார் மோதியது. இதில் காரில் இருந்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்த காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-