அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சார்ஜா, நவ-03
சார்ஜாவில் 35-வது சர்வதேச புத்தக கண்காட்சியை சார்ஜா ஆட்சியாளர் மேதகு டாக்டர் ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

சார்ஜா அல் கான் பகுதியில் உள்ள எக்ஸ்போ சென்டரில் சார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி நேற்று புதன்கிழமை தொடங்கியது. இந்த புத்தக கண்காட்சி 35-வது ஆண்டாக நடைபெற்று வருகிறது. இந்த புத்தக கண்காட்சியை சார்ஜா ஆட்சியாளர் மேதகு டாக்டர் ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி நேற்று புதன்கிழமை காலை தொடங்கி வைத்தார்.

இந்த தொடக்க விழாவில் அமீரக கலாச்சாரம் மற்றும் அறிவு மேம்பாட்டுக்கான மந்திரி மேதகு ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான், ஷேக்குகள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த புத்தக கண்காட்சியில் 1.5 மில்லியன் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த புத்தக கண்காட்சி வரும் 12-ஆம் தேதி வரை நடைபெறும். தினமும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அரங்கு
35-வது ஆண்டாக நடைபெறும் சார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் நூற்றுக்கணக்கான இந்திய புத்தக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்திய அரங்கினை இந்திய துணைத் தூதரக அதிகாரி தீபா ஜெயின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்திய அரங்கில் பங்கேற்றுள்ள புத்தக நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தேசிய புத்தக நிறுவனம்
சார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் இந்திய அரசின் தேசிய புத்தக நிறுவனம், தகவல் ஒளிபரப்புத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் வெளியீட்டு நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்கள் பல இந்திய அரங்கில் புத்தக கடைகளை அமைத்துள்ளன.

தேசிய புத்தக நிறுவனத்தின் துணை இயக்குநர் கஞ்சன் வன்ஜூ சர்மா கூறியதாவது, இந்திய அரசின் தேசிய புத்தக நிறுவனம் இந்திய எழுத்தாளர்களின் நூல்களை மக்களுக்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக மொழிபெயர்ப்பு நூல்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. லாபநோக்கின்றி இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

அமீரகத்தில் நூல்களை விற்பனை செய்வதில்லை. குறிப்பாக காட்சிக்கு மட்டுமே வைக்கப்படுகிறது. எனினும் வாசகர்களுக்கு தேவையான நூல்கள் குறித்த விபரங்களை தெரிந்து கொண்டு அவர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

பிற மொழியில் இருந்து குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா எழுதிய மோரா என்ற நூலும், தெலுங்கு மொழியில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட தெனாலிராமனின் மதியூகக் கதைகள் உள்ளிட்ட பல்வேறு நூல்களும் இந்த அரங்கில் இடம் பெற்றுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், இந்திய புத்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

போட்டிகள்
பள்ளி மாணவ, மாணவியருக்கு படம் வரையும் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் பல்வேறு பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

நன்றி:அதிரை நியூஸ்: 
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-