அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அமீரகம் தனது 45 வது தேசிய தினத்தை எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் தேதி கொண்டாடவுள்ளது. இந்நிலையில் அமீரக தொலைத்தொடர்பு நிறுவனமான 'எடிஸலாட்' தேசிய தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து அமீரகவாசிகளும் பயன்பெறும் வகையில் நாடு முழுவதும் 300க்கு மேற்பட்ட பொது இடங்களில், நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை இலவச அதிவேக வைபை (WIFI) சேவையை வழங்குகிறது.

ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் இலவச வைபை சேவைகளுடன் கூடுதலாக ஷாப்பிங் மால்கள், உயர்தர காபிடேரியாக்கள், கடற்கரைகள், பூங்காக்கள் போன்ற பல்வேறு பொது இடங்களிலும் கிடைக்கும்.

வாடிக்கையாளர்கள் etisalat.ae/wifi என்ற இணைய தளத்திற்கு சென்றோ அல்லது ‘Around Me’ எனும் எடிஸலாட் ஆப் வழியாகவோ இலவச வைபை சேவை கிடைக்கும் இடங்களை அறியலாம்.


Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-