அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...(கத்தார் பொது மன்னிப்பு காலம் முடிய இன்னும் 30 நாட்களே எஞ்சியிருக்கின்றன. சட்ட விரோதமாக அனுமதியில்லாமல் தங்கியிருப்பவா்கள் இன்னும் 30 நாட்களுக்குள் கத்தாரை விட்டு சென்று விடும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றாரகள்)
 கத்தார் நாட்டு உள்துறை அமைச்சின் உத்தியோகபூர்வ முகநூல் பக்க செய்தியில் கத்தார்  நாட்டில் தொழில் புரிவதட்காக வந்து பல்வேறு காரணங்களால் தத்தமது குடியிருப்பு அனுமதியினை (Resident Permit) புதுப்பித்துக் கொள்ளத் தவறிய சட்ட விரோத குடியிருப்பாளர்கள் எவ்வித சட்ட நடவடிக்கையும் இன்றி கத்தார்  நாட்டில் இருந்து வெளியேறிச் செல்வதற்கான பொது மண்ணிப்பிணை வழங்கவுள்ளதாக  கத்தார் நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 2016 செப்டம்பர் 1 முதல் 2016 டிசம்பர் 1 வரைக்குமான மூன்று மாதக் காலப் பகுதிக்குள் வெளியேறுவோருக்கு பொது மண்ணிப்பு வழங்கப்பட உள்ளதாக  கத்தார் நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
12 வருடங்களுக்குப் பிறகு இவ்வாறான பொதுமண்ணிப்பு காலம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு  கத்தாரின்  மொத்த சனத்தொகை அண்ணளவாக 650,000 இருந்த பொழுது இவ்வாறானதொரு பொதுமன்னிப்பினால் சுமார் 6,000 பேர் பயன் அடைந்தனர். எனினும், இவ்வருட ஏப்ரல் மாதக் கணக்கெடுப்பின் பிரகாரம் சுமார் 2,560,000 பேரைக் கொண்டதாக மொத்த சனத்தொகை காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேட்குறிப்பிடப்பட்ட சட்ட விரோத குடியிருப்பாளார்கள் Search and Follow up Department திணைக்களத்தினைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளை ஆங்கிலத்தில் பாா்வையிட கீழே உள்ள லிங்குகளை நாடவும்.
http://www.gulf-times.com/story/509416/MoI-announces-three-month-amnesty-for-illegal-res
https://www.facebook.com/moigovqatar.en/?fref=ts

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-