
மூன்று வருடங்களுக்குள் மீண்டும் உம்ரா கடமையை மேற்கொள்ளும் யாத்திரிகர்கள் சவூதி அரேபிய ஹஜ் உம்ரா அமைச்சுக்கு மேலதிக கட்டணம் ஒன்றைச் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குப் பிறகு உம்ரா கடமையை நிறைவேற்றியவர்கள் 3 ஆண்டுகளுக்குள் மீண்டும் உம்ரா கடமையை நிறைவேற்றுவதாயிருந்தால் விசா கொடுப்பனவுக்கு மேலதிகமாக 2000 சவூதி ரியால்கள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தினாலே உம்ரா விசா வழங்கப்படும்.
இதன் அடிப்படையில் ஒருவர் மூன்று வருடங்களுக்கு ஒரு தடவையே மேலதிக 2000 சவூதி ரியால்கள் செலுத்தாமல் உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்குப் பயணிக்க முடியும்.
வருடாந்தம் அதிகரித்துவரும் உம்ரா பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காகவே இப்புதிய கட்டணம் அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் ஹஜ் முகவர்கள் சங்கத்தின் தலைவர் எம்.எம். மொஹமட் நிஜார் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்;
இந்தப் புதிய கட்டணமுறை சிறந்ததென்றும் இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து அநேகர் வியாபார நோக்கமாகவே அடிக்கடி உம்ரா கடமைக்குச் செல்வதாகவும் தெரிவித்தார்.
இந்தப் புதிய நடைமுறையின் மூலம் வர்த்தக நோக்கமாக உம்ராவுக்குச் செல்வதில் தடையேற்படுவதாகவும் அவர் கூறினார்.
நன்றிMadawala News ARA.Fareel
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.