அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...



பெரம்பலூர், : பெரம்பலூரில் வரும் 29ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதுபற்றி கலெக்டர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:எரிவாயு உருளைகள் மறு நிரப்பு வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள், நுகர்வோர் பதிவுசெய்த குறைகளின்மீது நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவர்களின் மெத்தனபோக்கு தொடர்பாக வரப்பெறும் புகார்களைப்பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்து, எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தை சீர்படுத்துவது தொடர்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 29ம்தேதி மதியம் 3 மணி அளவில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.இக்கூட்டத்தில் எரிவாயு முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எரிவாயு நுகர்வோர் எரிவாயு சம்பந்தமாக குறைகள்இருப்பின் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம். எரிவாயு விநியோகம் தொடர்பாகக் காணப்படும் குறைபாடுகளைக் களைவது தொடர்பாக ஆலோசனைகளையும் வழங்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-