

பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.25ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும்
விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் நந்தகுமார் தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம்:– 33 சதவீதம் பயிர் விளைச்சல் ஏற்பட்டாலே மத்திய அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தியதால் உத்தரபிரதேசத்தில் வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம், பருத்தி, வெங்காயம், மரவள்ளி ஆகிய பயிர்கள் விதைக்கப்பட்ட நிலையில் போதிய அளவு நீர் இல்லாததாலும், வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதாலும் வறட்சி நிவாரணம் வழங்கவேண்டும்.
நிவாரணம்
விவசாய தொழிலாளர் சங்க பொறுப்பாளர் குரும்பலூர் ரமேஷ்:– கூட்டுறவு கடன்சங்கங்களில் பணபரிவர்த்தனை பாதிக்காத வகையில் முறைப்படுத்தவேண்டும். வறட்சியால் பாதித்த மாநிலமாக தமிழ்நாட்டை அறிவித்து விளைச்சல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும்.பயிர்காப்பீட்டுக்கான முழுத்தொகையை அரசே செலுத்தவேண்டும்.
துங்கபுரம் ராமலிங்கம்:– எறையூரில் உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் ரூ.42.12 கோடியில் இணைமின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு 2010–ல் டெண்டர் விடப்பட்டது. 6 ஆண்டுகள் ஆகியும் அதற்கான பூர்வாங்க பணிகள் இதுவரை தொடங்கப்படாமலேயே உள்ளது. மின்உற்பத்தி திட்டத்தை உடனே தொடங்கவேண்டும். புதுவேட்டக்குடி– எறையூர் சர்க்கரை ஆலை இடையே 5 கி.மீ. தூரத்திற்கு புதிய சாலைப்பணிகள் முடிக்கப்படாமலேயே உள்ளது. இதனை விரைந்து முடிக்கவேண்டும்.
பூலாம்பாடி வரதராஜன்:– கூட்டுறவு பால்சொசைட்டிகளில் பால் வழங்கிய விவசாயிகளுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே பணம் வழங்கப்படுகிறது. பால்கொள்முதலுக்கான தொகையை உடனுக்குடன் வழங்க பால்கூட்டுறவு ஒன்றியம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இரூர் ராமராஜ்:– வேப்பந்தட்டை பகுதியில் ஆறுகள், ஓடைகள் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டுவருகிறது. தடுப்பணைகள் கட்டும் பணியை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்டாரங்களுக்கும் விரிவுபடுத்தி, நிலத்தடி நீரை சேமிக்க வழிவகை செய்யவேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் சீமைக்கருவேல மரங்கள் அதிகம் வளர்ந்துஆக்கிரமித்துள்ளன. இதனால் நீர்வளம் பாதிக்கப்படுகிறது. ஆகவே ஏரிகளில் சீமைக்கருவேல மரங்களை போர்க்கால அடிப்படையில் உடனே அகற்றிட உத்தரவிடவேண்டும்.
தள்ளுபடி
மேலும் பல விவசாயிகள் பேசும்போது, தமிழ்நாடு மின்வாரியத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் மின்இணைப்பு கேட்டு பதிவு செய்து 20 ஆண்டுகாலமாக காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனே மின்இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தை அறிவித்து தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் பயிர்க்கடன் மற்றும் வேளாண்மை சார்ந்த இதர கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறினர்.
கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முத்துக்குமாரசாமி, வேளாண்மை இணை இயக்குனர் சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜசேகர் மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.