அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சவுதி அரேபியாவில் வாட்ஸ் அப் (Whats App) ஊடாக தகாத வார்த்தைகள் மூலம் விவாதித்துக் கொண்ட இரண்டு பெண்களுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

குறித்த பெண்கள் இருவரும் குறுஞ்செய்தி பரிமாற்றிக் கொள்ளும் போது தகாத வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் என இவர்க்ள மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த பெண்களில் ஒருவர், தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொள்கின்றார் என மற்றைய பெண்ணுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சவுதி அரசாங்கம், குறித்த பெண்னை தொலைபேசியுடன் நீதிமன்றில் முன்னியைாகுமாறு நோட்டீஸ் விடுத்திருந்தது.

பின்னர், வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குறித்த பெண் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை பின்னர் தொலைபேசியை பரிசோதனை செய்த பின்னர் குறித்த பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இரண்டு பெண்களுமே தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டு வட்ஸ்அப் (WhatsApp) ஊடாக குறுஞ்செய்தி பரிமாற்றிக் கொண்டமையினால் இருவருக்கும் சமமான தண்டனை வழங்கி குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எனவே, Jeddahவில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் குறித்த பெண்கள் இருவருக்கும் 10 நாள் சிறைத் தண்டனை மற்றும் 20 சவுக்கடி வழங்குமாறு தீர்ப்பளித்துள்ளது.

மேலும், மீண்டும் இவ்வாறு தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என இரண்டு பெண்களுக்கும் சவுதி அரேபிய நீதவான் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-