அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


குவைத் ஐனநாயக முறையில் தேர்தல்நடைபெறுகின்றன ஒரு வளைகுடா நாடு ஆகும்.கடந்த அரை நூற்றாண்டாக குவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.இந்ந நிலையில் 15-வது பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றது.

பாராளுமன்ற தேர்தல் முறையை 1963 அறிமுக செய்த முதல் வளைகுடா நாடு குவைத்.இதை தவிர பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் வளைகுடா நாடு என்ற பெருமையையும் குவைத்திற்கு
உண்டு. பாராளுமன்ற பிரதிநிதிகள் பதவி காலம் நான்கு ஆண்டுகள் ஆகும்.

இதில்மொத்தமாக50பிரதிநிதிகள்தேர்வுசெய்யபடுவார்கள். அல்சபா மன்னர் பரம்பரையை சேர்ந்த அரச குடும்பத்தினர் இந்த 50 பிரதிநிதிகளுடன் இணைந்து ஆட்சியை மேற்கொள்கிறார்.

அரசியல் கட்சிகளுக்கு குவைத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது இருந்தாலும் மூன்று முக்கிய அரசியல் கட்சிகள் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது.இது போல் குவைத் பாராளுமன்ற சட்டத்தில் பலமுறை மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது
குறிப்பிடத்தக்கது. 

இதில் முக்கியமான மாற்றம் 2012 கொண்டு வரப்பட்டது.
இதன்படி ஒரு குவைத் நபருக்கு நான்கு பிரதிநிதிகளுக்கு ஓட்டு போடாலாம் என்ற முறை மாற்றி ஒருவருக்கு ஒரு வாக்குரிமை
என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதை எதிர்த்து எதிர் கட்சிகள் கடந்த 2012 2013 தேர்தல்களை புறக்கணித்தது குறிப்பிடதக்கது.இந்த முறை 14 பெண்மணிகள் உட்பட 297
போட்டியிட்டுள்ளனர்.இந்த முறை எதிர்ப்பு தெரிவித்து வந்த எதிர் கட்சிகள் நாட்டின் நலன்கருதி தேர்தலில் போட்டியிட்டனர். 

இதனால் போட்டியின் முடிவுகள் கடுமையாக இருக்கும் என்று தெரிகிறது.இதை தவிர குவைத்தில் போலீஸ் மற்றும் ராணுவ வீரர்களுக்கு ஓட்டுரிமை இல்லை.13 லட்சத்திற்க்கு அதிகமான குடிமக்கள் உள்ளனர்.இவர்களில் குழந்தை மற்றும் வயது வரம் எட்டாத நபர்களை தவிர483186 பேர் மட்டுமே ஓட்டுரிமை உள்ளவர்கள்.
இதில் அதிகம் பெண்களே.0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-