அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், துறைமங்கலம் தெப்பக்குளங்களை ரூ.1.43 கோடியில் மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தெப்பக்குளம்

வடகிழக்கு பருவமழையின் போது பெரம்பலூரில் உள்ள தெப்பக்குளம் முழுமையாக நிரம்பி மேற்கு கரைப்பகுதியில் அரிமானம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் பெரம்பலூர் தெப்பக்குளம் மற்றும் துறைமங்கலத்தில் மாவட்ட அரசு கண் மருத்துவமனை பின்பகுதியில் உள்ள தெப்பக்குளம் ஆகியவற்றை தூர்வாரி சீரமைத்து மேம்படுத்திட ரூ.1 கோடியே 43 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப் பட்டுள்ளது.

சுற்றுச்சுவர் கட்டும் பணி...

இந்த நிதியை கொண்டு தெப்பக்குளங்களை மேம் படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பெரம்பலூர் தெப்பக்குளத்தின் மேற்கு கரையில் உள்ள கற்களால் ஆன தடுப்பு சுவருக்கு பதிலாக கான்கிரீட் சுவர் கட்டப்பட்டுள்ளது. மேலும் தெப்பக்குளத்தின் மேற்கு கரையில் நடைபாதை புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கிழக்கு, தெற்கு கரைகளில் உள்ள நடைபாதைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே முதல்கட்டமாக பெரம்பலூர் தெப்பக்குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணியும், தெப்பக்குளத்தை சுற்றி பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதையை மேம்படுத்தும் பணியும், தெப்பக்குளத்தை பாதுகாத்திட சுற்றுச்சுவர் கட்டும் பணியும் நடந்து வருகிறது. தெப்பக்குளத்தின் தெற்கு பகுதியில் சுற்றுச்சுவர் முழுமையாக எழுப்பப்பட்டுள்ளது. தற்போது கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு வருகிறது,

விளையாட்டு உபகரணங்கள்

மேலும் தெப்பக்குளத்தை சுற்றி ஒளிரும் எல்.இ.டி. விளக்குகளும், சிறுவர்களுக்காக விளையாட்டு உபகரணங்களும் விரைவில் அமைக்கப்பட்ட உள்ளன. துறைமங்கலத்தில் உள்ள தெப்பக்குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணியும் விரைவில் தொடங்கும் என்று பெரம்பலூர் நகராட்சி ஆணையர் முரளி தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-