அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


மத்திய பிரதேச மாநிலம், போபாலில் சிறையில் இருந்து தப்பிய ‘சிமி’ இயக்கத்தை சேர்ந்த 8 பேர் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 1654 பேர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசிடம் இருந்து மனித உரிமைகள் ஆணையம் இத்தகவலை பெற்றுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற என்கவுன்டர் குறித்த தகவல் வெளியாகவில்லை. ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், சத்தீஸ்கரில் அதிகளவில் என்கவுன்டர்கள் நடக்கின்றன.


போலீஸ் காவலில் இருக்கும்போது கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. அந்தவகையில், 2013ம் ஆண்டு முதல் கடந்த ஜூன் மாதம் வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 470. போலீசாரால் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக 1,358 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்திய சிறைகளில் அளவுக்கு அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்படுகின்றனர். இதனால் சிறையில் வன்முறைகள் அதிகளவில் நடப்பதாகவும், விதிமுறை மீறல் தொடர்பாக கடந்த ஆண்டு 800 புகார்கள் வந்துள்ளதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.-  

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-