அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...விஷ காய்ச்சல்


பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரம்பலூர் டவுன், துறைமங்கலம், அரணாரை பகுதிகளில் குறிப்பாக பெரம்பலூர் நகராட்சி 4, 6, 7–வது வார்டுகளில் டெங்குவை பரப்பும் கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது. இதனால் நகராட்சி நிர்வாகமும், மாவட்ட சுகாதாரத்துறையும் இணைந்து டெங்குவை பரப்பும் கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்கள் ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, பெரம்பலூர் எளம்பலூர் சாலையை சேர்ந்த மஞ்சு (வயது 25) என்ற பெண்ணுக்கு விஷ காய்ச்சல் ஏற்பட்டது. கடந்த மாதம் 23–ந் தேதி திருச்சியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சிறுவன் பலி


இந்த நிலையில், மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் ஒருவன் பலியாகி உள்ளான். அதுபற்றிய விவரம் வருமாறு:–

பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள சாமியப்பா நகரை சேர்ந்தவர் மோகன். நகை வேலை செய்யும் தொழிலாளி. இவரது மனைவி செல்வராணி. இந்த தம்பதியினரின் மகன் நித்தி (5), ஒரு தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தான். கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நித்தி நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தான்.

இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத்துறையினரும், பெரம்பலூர் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-